மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

malainer segaripu payangal in tamil

இறைவனின் அற்புதப் படைப்புக்களில் ஒன்று மழைநீர். “நீரின்றி அமையாது உலகு” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் இன்று நீரின் முக்கியத்துவம் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இதனால் நீர் விரயமாவதற்கு மனிதனே முதல் காரணமாக அமைகின்றான். இதன் விளைவுதான் நீர்ப் பற்றாக்குறை.

நீர் பற்றாக்குறை நிகழும்போது தான் மழை நீரின் சேமிப்பு பற்றி கவனம் கொள்ளப்படுகின்றது. மழைநீர் சேகரிப்பு பல்வேறு பயன்களை அளிக்கின்றன. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்

உலகளாவிய ரீதியில் அதிகரித்த சனத்தொகை, அதிகரித்த நீர் பயன்பாடு, நீர் வீணாகுதல் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இதனால் காலப்போக்கில் உலக அளவில் நீரின் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இத்தகைய நீர் பற்றாக்குறை பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு மழைநீர் சேகரிப்பு பயன்படும்.

பாதுகாப்பான குடிநீரைத் தருகின்றது

முன்னோர் காலத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மக்கள் வாழ்ந்தனர். மழைநீரை சேமித்து அதனைக் கொதிக்க வைத்து அருந்தி வந்தனர். அதிக தரமான நீர் எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் மழைநீர் ஆகும்.

செலவு குறைவு

இன்று இயற்கையாகக் கிடைக்கும் நீரை மறந்து நாம் பணம் கொடுத்து நீரைப் பெறுகின்றோம். ஆனால் மழைநீரை சேமிக்கும் போது, பணச்செலவு மீதம் ஆகின்றது.

வெள்ள சேதம் குறையும்

மழைநீரை ஒவ்வொருவரும் சேமிக்கத் தொடங்கி விட்டால், அல்லது மழைநீர் அறுவடையினால் வெள்ள சேதம் குறையும், மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.

கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுகின்றது

இன்று வான் அளவில் உயர்ந்த கட்டிடங்கள் பல கட்டப்படுகின்றன. இவற்றிற்காக அதிகளவு தண்ணீர் செலவாகின்றது. எனவே மழை நீரை சேமிப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம்.

விவசாயம் செய்வதற்கு பயன்படுகின்றது

விவசாய நிலங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி அவற்றை விவசாய செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம்

நிலத்திற்கு அடியில் பெரிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம். மழைநீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கலாம்.

இதன் மூலம் நிலத்தடி நீரின் வளத்தை பாதுகாக்க முடியும்.

மண் வளத்தையும் மேம்படுத்தலாம்

விவசாயப் புரட்சி காரணமாக இன்று செயற்கை உரங்கள் மற்றும் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீரில் தன்மை அற்றுப்போகிறது. மழைநீரை சேகரிக்கும் போது மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், மண் வளம் மேம்படுத்தவும்படுகின்றது.

கழிவறைப் பாவணைக்குப் பயன்படுத்தலாம்

மழைநீரைச் சேமித்து அந்த நீரை கழிவறைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம். இதனால் அதிகரித்த நீரின் பாவனை தடுக்கப்படுவதுடன், தண்ணீர் தேவையின் மிகுதியான பற்றாக்குறையும் தடுக்கப்படுகின்றது.

துணி துவைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

மழைநீரை வீடுகளிலேயே சேமித்து அந்நீரை தமது அன்றாட பாவனைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். துணிகள் துவைப்பதற்கு மழைநீரை பயன்படுத்தும்போது, அதிக பணம் கொடுத்து நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

You May Also Like :
மனிதனின் ஐந்து கடமைகள்
தமிழில் பிற மொழி கலப்புக்கான காரணங்கள்