மன அழுத்தம் என்றால் என்ன

mana alutham in tamil

மன அழுத்தம் அறிமுகம்

வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கின்றதோ இல்லையோ மன அழுத்தம் என்கின்ற பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். உடலின் உண்டாகக் கூடிய நோய்களை விட மிகவும் மோசமானது மன அழுத்தம் ஆகும்.

மன அழுத்தம் உடையவர்கள் எப்போதும் எந்த ஒரு விடயம் அவர்கள் மனதை அதிகம் பாதிக்கின்றதோ அதையே திரும்பத் திரும்ப சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் வாழும் வாழ்க்கை சவால் நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து அதனை சிறப்பாகக் கையாளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் என்றால் என்ன

மன அழுத்தம் என்றால் என்ன

மன அழுத்தம் என்பது மனம் விரும்பாத காரியம் ஒன்று நிகழும் போதோ, நாம் மனதுக்கு எதிரான சூழ்நிலைகளை சந்திக்கும் போதோ, நாம் நேசிக்கத்தக்க ஒருவரது அன்பையும், உறவையும் இழக்கும் போதோ, நாம் எதிர்பார்த்த காரியங்கள் நடக்காமல் போகும் போதோ மனதில் ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சினை எனலாம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

இன்றைய வாழ்க்கை முறையே மன அழுத்தத்திற்கு அதிகம் காரணமாகும். இன்றைய உலகமானது போட்டி நிறைந்த உலகமாக மாறி வருகின்றது.

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், ஜாதி, இன வேறுபாடு என அனைத்திலும் போட்டி நிறைந்ததாக உள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை அதிகமாக உள்ளது.

80 சதவீதமான மக்கள் வேலைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் திருமணத்தின் பின்பு ஏற்படும் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமல் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

எல்லாவற்றிற்கும் எதிர்மறையாக சிந்திக்கும் போதும், எதிர்காலம் பற்றிய பயம் போன்றவற்றினாலும் மன அழுத்தம் ஏற்படுகின்றது.

மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புக்கள்

தூக்கமின்மை, எந்த வேலையையும் செய்ய நாட்டம் இல்லாமல் இருப்பது, வேலையில் கவனம் இல்லாதிருப்பது, ஞாபகமறதி, தாழ்வு மனப்பாங்கு, தனிமை உணர்வை அதிகம் விரும்புவது இது போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளில் அவதிப்படுவது மட்டுமல்லாது

நாளடைவில் இதயம் பலவீனமடைதல், பயம், பதட்டம், இதயம் வேகமாகத் துடிப்பது, செரிமானம் சார் பிரச்சினைகளால் அவதிப்படுவது, இரத்த அழுத்தம் அதிகமாதல் என முடிவில் முடி கொட்டுவது வரை ஏற்படுகின்றது.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்

மன அழுத்தமான சூழ்நிலையில் சிரிப்பது என்பது கடினமான ஒன்றாகும். எனினும் சிரிக்கும் போது எம்மை அறியாமலேயே மன அழுத்தத்தின் வேகம் குறைவடையும். அதுமட்டுமல்லாது மூளையில் மகிழ்ச்சியை உண்டாக்க கூடிய ஹார்மோன் உண்டாகும்.

இதன் மூலமாக மன அழுத்தம் குறையும். சிரிக்க முடியாவிட்டால் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்க்கலாம் அல்லது கேட்கலாம். இதன் மூலமாக எம்மை அறியாமலே சிரிப்பது மட்டுமன்றி, மன அழுத்தமும் குறையும்.

நடைபயிற்சி செய்யலாம், பிடித்த பாடல்களைக் கேட்கலாம், அதுமட்டுமல்லாது நன்றாக தூங்குதல் மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.

ஏதாவது ஒரு வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இயற்கையுடன் நேரத்தை செலவிடலாம், ஆழ்ந்த மூச்சு பயிற்சியை மேற்கொள்ளலாம். உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடம் மனம் விட்டு பேசலாம்.

எந்த ஒரு பிரச்சனையையும் நிரந்தரமானதல்ல. இதுவும் கடந்து போகும் என்பதை மனதில் வைத்து மகிழ்வாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

You May Also Like :
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்
மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாதவை