“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று ஔவையாரின் வாக்குகிணங்க மனிதன் என்பவன் இவ்வுலகில் படைக்கப்பட்ட முதன்மையான படைப்பினமாவான்.
மனிதன் ஒரு விலங்கியல் இனம் எனக் கூறப்பட்டாலும் அவன் மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபட்டவன் ஆகின்றான்.
மனிதனுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த மூளை உண்டு இதனால் பண்பியல், பகுப்பாய்வு, மொழி, உள்முக ஆய்வு, பிரச்சினைகளை தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றை கையாளுகின்றான்.
இதனால் மனித இனம் வேறு இனத்திலிருந்து வேறுபடுகின்றது. இதனால் மனிதனே சிறப்புடையவனாகின்றான்.
எது எவ்வாறாயினும் தமிழ் இலக்கணப்படி மனிதன் என்பது ஒரு பெயர்ச்சொல். இப் பெயர்ச்சொல்லானது பயன்படும் சந்தர்ப்பங்களுக்கேற்ப பல்வேறு பெயர்களை பெறுகின்றது. அது பற்றிய ஆராய்வோம்.
Table of Contents
மனிதன் என்ற சொல்லின் பொருள் விளக்கம்
மன் என்பதற்கு தமிழில் நிலைத்த என்பது பொருளாகும். வடமொழியும் இதே பொருளில் மனுஷ் என்று மனித இனத்தை சுட்டுகின்றது.
பூமியை ஆளப்பிறந்தவர்கள் என்பது பின்னாளில் விளக்கப் பொருளாயிற்று. மன் என்பதிலிருந்து மன்னன் என்னும் சொல்லும் தோன்றியது. மனிதர்களை ஆள்பவன் மன்னன் என்பதன் விரிவு ஆகும்.
ஆங்கிலத்திலும் இவ்வாறே மன் என்பது மேன் என்று ஆயிற்று. ஆக உலக மொழிகள் பலவற்றில் இந்த உட்கூற்றுடனே மனிதனைக் குறிக்கும் சொற்கள் தோற்றம் பெற்றுள்ளன.
தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்ற உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
மற்றைய விலங்கினங்களின் அமைப்புகளை போல் அல்லாமல் மனிதர்களின் மொழித்திறன் சிறப்பிற்குரியது.
அத்துடன் குறிப்பிட்டு அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை மனிதர்களுக்கு உண்டு. இவ்வாறு தனிச் சிறப்புடையவனே மனிதன் ஆவான்.
மனிதன் வேறு பெயர்கள்
- ஆண்டோர்
- ஊனவர்
- நார்
- மண்ணவர்
- மன்
- மானுடர்
- மானுடன்
- மானுயர்
- மானவர்
- மாந்தர்
மனிதர்கள் பெருமளவாக திரண்டு இருக்கும் போது அழைக்கப்படும் பெயர்கள்:
- மக்கள்
- மாக்கள்
அவ்வாறு திரண்ட மக்களை சுட்டும் பெயர்கள்:
- ஈட்டம்
- களர்
- களன்
- கற்றை
- கூட்டம்
- கூட்டரவு
- திரள்
- நாரம்
- பெரும்
You May Also Like : |
---|
மகன் வேறு சொல் |
உணவு வேறு சொல் |