மனவெழுச்சி என்றால் என்ன

உடல் நலம் மற்றும் மனநலமும் சரியாக பெற்றிருக்கும் போதேதான் எமது எதிர்கால வாழ்க்கையானது சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைந்து காணப்படும்.

மனவெழுச்சி என்றால் என்ன

மனவெழுச்சி என்பது உணர்ச்சிகள் மேலோங்கிக் காணப்படும் ஒரு நனவு நிலையே மனவெழுச்சி ஆகும். அதாவது ஓர் உயிரியை பாதிக்கின்ற சம்பவம் அல்லது அதனை கவருகின்ற சம்பவத்தின் போது மனவெழுச்சிகள் தொழிற்படுகின்றன.

இங்கு மன உணர்ச்சிகளும் புலனுணர்ச்சிகளும் ஒருங்கே சேர்ந்த நிலையினையே மனவெழுச்சியானது சுட்டிக்காட்டுகின்றது.

மனவெழுச்சியின் பண்புகள்

மனவெழுச்சியானது தனிப்பட்டதாகும். மேலும் ஒரு தனியனில் இருந்து இன்னொரு தனியனில் வேறுபட்டது.

மனவெழுச்சி பொதுவானது குழந்தைகளில் இருந்து முதுமை பருவம் வரையிலான அனைத்து வளர்ச்சி நிலையிலும் எல்லா உயிர்களிடத்திலும் சாதாரணமாக காணப்படும்.

தூண்டல் மாறுபடுகின்ற நிலைகளில் கூட ஒரே வகையான மனவெழுச்சிகள் ஏற்பட முடியும்.

மனவெழுச்சியானது இடம் மாறும் தன்மை கொண்டது.

மனவெழுச்சி என்பது எமது உடலில் ஏற்படும் உணர்ச்சியாகும்.

மனவெழுச்சி அனுபவங்கள் பல்வேறுபட்ட உடலியல், உடற்கூற்றியல் மாற்றங்களுடன் தொடர்புபட்டதாகவே காணப்படும்.

மனவெழுச்சி அதிகரிக்கும் போது நுண்ணறிவு எதிர்நிலை தன்மையானதாக காணப்படும்.

மனவெழுச்சியானது திடீரென ஏற்படும். ஆனால் படிப்படியாக குறையும்.

மனவெழுச்சியின் வகைகள்

சாதகமான மனவெழுச்சி

மனம், உடல் போன்றவற்றை பாதிக்காமல் அமைகின்ற மனவெழுச்சி சாதகமான மனவெழுச்சி எனப்படும். இதனூடாக சாதகமான விளைவுகளே ஏற்படும். தீவிரத்தன்மை, உடல் கிளர்ச்சி போன்றவை ஏற்படாது. சந்தோசம், அன்பு, மகிழ்ச்சி பாசம் போன்ற மனவெழுச்சிகளே ஏற்படும்.

பாதகமான மனவெழுச்சி

பாதகமான மனவெழுச்சியின் போது மனம், உடல் போன்றவற்றை பாதிக்க கூடியதாக இது காணப்படும். மனவெழுச்சியின் காரணமாக விளைவுகள் ஏற்படும். பயம், கோபம், பதட்டம், கவலை, பொறாமை, சலிப்பு, முகம் விகாரமடைதல் போன்ற தீவிரத்தன்மை பாதகமான மனவெழுச்சியினுடாக ஏற்படும்.

தீவிர மனவெழுச்சியினை மறைப்பதனால் ஏற்படும் நோய்கள்

பல வகையான நோய்கள் ஏற்படக்கூடும். அதாவது தோல் அலர்ச்சி, அரிப்பு, வீக்கம் போன்ற தீவிர உணர்ச்சிகளின் காரணமாக தோன்றுகின்றது.

தசை, மூட்டு நோய்கள், ஏற்படுதல், மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றன அதிகளவில் இடம்பெறும் போது உடம்பில் அதிகளவான வலிகள் ஏற்படும் கால் மூட்டுகளுக்கிடையான வலி, தலைவலி போன்றன ஏற்படும்.

மனதில் ஏற்படும் அழுத்தங்கள், பகைமை உணர்வுகளும், குற்ற உணர்வுகளும் ஒருவருக்கு அதிக உயர் இரத்த அழுத்ததை ஏற்படுத்தும்.

பயம், பதட்டம், தாழ்வு மனப்பான்மை போன்றவை காரணமாக நோய்கள் ஏற்படும். மேலும் மனமாறுபாடுகள் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் பாரிய பங்கை வகிக்கின்றது.

பாதகமான மனவெழுச்சியிலிருந்து மனதை இலகுவாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள்

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல், எளிமையான வாழ்க்கையினை பின்பற்றல், மற்றவர்களை புரிந்து கொண்டு உதவி செய்தல், ஆக்கத்திறனாக சிந்தித்தல், விடுமுறை நாட்களில் குழுவாக பயணங்களை மேற்கொள்ளல், இசை கேட்டல், பாட்டுக்களை பாடுதல் போன்றவற்றை செய்யலாம்.

சாதாகமான மனவெழுச்சியினூடாக எமக்கு சாதாகமான விளைவுகளே ஏற்படும். ஆனால் பாதகமான மனவெழுச்சியின் காரணமாக எமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு மாத்திரமல்லாது எம்மால் நிம்மதியான வாழ்க்கையினை வாழமுடியாத ஒரு சூழலும் காணப்படுகிறது.

சிறந்த நல்ல பழக்கவழக்கங்களை கடைப்படிப்பதோடு கோபம், பதட்டம், பயம், கவலை என எம்மை நிம்மதியற்று காணப்பட வைக்கும் விடயங்களை தவிர்த்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான விடயங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

Read More: படபடப்பு குறைய வழிகள்

மன அழுத்தம் என்றால் என்ன