மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

Mahatma Gandhi Katturai In Tamil

இந்த பதிவில் “மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை” (Mahatma Gandhi Katturai In Tamil) காணலாம்.

மகாத்மா காந்தி இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் அகிம்சை வழியில் இந்தியாவுக்காக போராடிய போராளி.

கட்டுரை போட்டிகள் மட்டும் கட்டுரை பரீட்சை போன்றவற்றுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. கல்வி
  4. பணிகள்
  5. சுதந்திர போராட்டம்
  6. முடிவுரை

முன்னுரை

சுதந்திர இந்தியாவின் “தேசபிதா” என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார் பிரித்தானியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரமடைய செய்ததில் இவரின் பங்கு அளப்பரியதாகும்.

அகிம்சை எனும் வளியில் தேசப்பற்றை இந்திய மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மகான் ஆவார் இன்றும் இந்திய அரசியலின் முன்னோடியாக பெருமைப்படுத்தப்படுகிறார்.

இந்தியாவின் அரச அலுவலகங்கள் நிறுவனங்களின் காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தியா பண தாள்களின் காந்தியின் தலை பொறிக்கப்பட்டு இருக்கும் இவ்வாறு மக்கள் இவரை பெருமைப்படுத்துகிறார்கள்.

இவருடைய பிறப்பு வளர்ச்சி கல்வி அவர் இந்தியாவில் ஆற்றிய பணிகள் சுதந்திர போரட்டத்தில் அவரது பங்கு போன்ற விடயங்களை இக்கட்டுரை தெளிவு செய்கிறது.

பிறப்பு

காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந் காந்தி ஆகும் இவர் 1869 ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

இவரின் தாய்மொழி குஜராத்தி மொழி ஆகும் இவர் தனது 13 ஆவது வயதில் கஸ்த்தூரி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் தனது 16 ஆவது வயதில் தந்தையை இழந்தார் காந்தி கஸ்த்தூரி பாய் தம்பதியினருக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தன . இவ்வாறு தனது குடும்ப வாழ்வோடு நின்று விடாமல் சமூக பற்றுடையவராக காந்தி வாழ்ந்தார்.

கல்வி

படிப்பில் சுமாரான மாணவராக இருந்தாலும் நேர்மையான மாணவனாக விளங்கினார் தனது 18 வது வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

வழக்கறிஞர் கல்வியை முடித்து இந்தியா திரும்பி சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்படிவங்களை நிரப்பும் பணியை செய்தார் 1893 இல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாபிரிக்காவில் பணி புரிய பயணம் ஆனார்.

தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மேலோங்கி இருந்தது இது காந்தியை வெகுவாக பாதித்தது தென்னாபிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றியது.

பணிகள்

இவர் தென்னாபிரிக்காவின் பிரிட்டேரியா செல்ல ரயிலில் ஏறிய காந்தி ஒரு வெள்ளையர் இல்லை என்பதற்காக ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டார் அதே ரயில் நிலையத்தில் இன்று காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்திய மக்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்து தென்னாபிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்தார்.

1894 இல் தென்னாபிரிக்காவில் “நாட்டல் இந்தியா காங்கிரஸ்” என்ற கட்சியை ஆரம்பித்து அவரே பொறுப்பானார். 1906 இல் ஜொகனஸ்பேர்க் இல் நடந்த போராட்டத்தில் முதன் முதலாக அறவழி போராட்டத்தை துவங்கினார்.

அகிம்சை ஒத்துழையாமை கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகியன அறவழி போராட்டத்தின் பண்புகளாகும்.

அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் காந்தி வெற்றி கண்டார் பின்பு 1915 இல் இந்தியா திரும்பினார்.

விடுதலை போராட்டம்

இந்தியாவில் தனது சொந்த நாட்டு மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதை கண்டு வேதனை அடைந்த காந்தி “இந்திய தேசிய காங்கிரஸ்” இல் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924 இல் “இந்திய தேசிய காங்கிரஸ்” இயக்கத்தின் தலைவரானார் காந்தி தலைமையேற்றவுடன் காங்கிரஸ் இல் பல மாற்றங்களை ஏற்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.

அறப்போராட்டம் சுதேசி போன்ற கொள்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் விடுதலை இயக்கம் ஆக்கினார் இவர் முதலில் விவசாயிகளுக்கான “சம்பாரண்” போராட்டத்தை மேற்கோண்டார்.

பீகாரில் முதன்முதலில் சத்தியாக்கிரகம் எனும் வழியை வெற்றிகரமாக பயன்படுத்தினார்.

1930இல் 240 மைல் நடைபயணம் இந்திய வரலாற்றில் உப்பு சத்தியாகிரகம் என்று சொல்லப்படுகிறது இந்திய போராட்ட வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாகும்.

1942 ஆங்கில அரசுக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் காந்தி பெரும் பங்காற்றினார் 1948 இல் இந்தியா சுதந்திரம் பெற முக்கியமான ஒருவராக மகாத்மா காந்தி விளங்கினார்.

இவருக்கு இரவீந்திர நாத் தாகூர் “மகாத்மா” என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்.

முடிவுரை

இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் முன்னுதாரணமான தலைவராக மகாத்மா காந்தி தன் வாழ்வில் சத்தியம் நேர்மை அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய மகான் ஆவார்.

இவர் குஜராத் மொழியில் எழுதிய தனது சுயசரிதை சத்தியசோதனை என தமிழில் மொழிபெயர்க்கப்பட் பிரபல நூலாகும்.

காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் நினைவுச்சிலைகளும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய கல்வி திட்டத்தில் காந்தியின் வரலாறு ஒரு பாடமாகவும் கற்பிக்கபடுகிறது ஆக மக்களுக்காக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்பதில் ஜயமல்லை.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

You May Also Like:

காடுகளின் பயன்கள் கட்டுரை

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை