அதிக உடல் உழைப்பு, அதிக கோபம், அதிக மோகம், காமம் இவைகளால் உடலில் உஷ்ணம் அதிகமாகி, தாதுக்கள் பலம் குறைந்து, மேகம் உண்டாகி ஆசனவாயின் உள்ளேயும், வெளியேயும், பக்கவாட்டிலும் முளைகளாகவும், கட்டிகளாகவும், புற்று கண்கள் போன்று வீக்கம் ஏற்பட்டு, அரிப்பு உண்டாகி கட்டிகள் பழுத்து உடைந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளில் இருந்து சீழ் மற்றும் ரத்தம் வடியும் இயல்புடைய நோயாகும்.
பௌத்திரம் என்ற நோயானது ஆங்கிலத்தில் Fistula என்று அழைக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 50000 – 100000 மக்கள் பௌத்திர நோயால் பாதிப்படைகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மகப்பேறு மருத்துவக் கவனிப்பு இல்லாததால் மகப்பேற்றியல் Fistula பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்து நாட்டில் இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்படுகின்றது.
பௌத்திரத்தை சர கண்ட மாலை, ஆசன கண்ட மாலை, கொடிப் பௌத்திரம், மேகப் பௌத்திரம், கிரந்தி பௌத்திரம், பக்க பௌத்திரம், மூலப் பௌத்திரம், ஆசனப் பௌத்திரம் என எட்டு வகையாக பிடித்திருந்தாலும்
பொதுவாக பௌத்திரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மேல் பக்கப் பௌத்திரம், கீழ்ப்பக்கம் பௌத்திரத்திரம் என்பனவே அவை இரண்டும் ஆகும்.
மேல் பக்க பௌத்திரமானது குணமாவது கடினம். கீழ்ப்பக்கம் பௌத்திரத்தில் துர்நாற்றத்துடன் கூடிய கசிவானது சொட்டு சொட்டாக இறங்கும்.
பௌத்திரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பயனைப் பெறலாம். இதனோடு ஆகாயத் தாமரை இலையை அரைத்து அந்த இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
அதிகப்படியான உடல் சூடே பௌத்திரம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது என்பதால் உடற் சூட்டைத் தணிக்க எண்ணெய் குளியல், உணவில் நீர்க் காய்கறிகளை (தக்காளி, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி) அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Table of Contents
பௌத்திரம் என்றால் என்ன
பௌத்திரம் என்பது சமஸ் கிருதச்சொல்லாகும். பவுத் என்றால் துளை என்று பொருள். புரையோடி (செப்டிக் ஆகி), துளை உண்டாவதால் இந்த நோயை பௌத்திரம் என்கிறார்கள்.
அதாவது பௌத்திரம் என்பது ஆசன வாய்ப்பகுதியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட புண் காரணமாக மலப்புழைக்கும், வெளிப்புறத் தோல் பகுதிக்கும் இடையே ஏற்படும் துவாரம் ஆகும்.
பௌத்திரம் நோயின் அறிகுறிகள்
ஆசனவாயை சுற்றிலும் வலி மற்றும் எரிச்சல் இருப்பது இதனது பிரதான அறிகுறியாகக் காணப்படுகின்றது.
ஓரிடத்தில் அமரும் போது அல்லது குடல் இயக்கத்தின் போது அதிக வலி ஏற்படும், சீழ் வெளியேறும் மேலும் ஆசன வாய் அருகில் துர்நாற்றமும் ஏற்படும்.
ஆசனவாயில் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்து காணப்படும். சிலருக்கு இரத்தப் போக்கு இருக்கும். அடிக்கடி சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கள், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். (பௌத்திர வகையைப் பெறுத்து அறிகுறிகள் மாறுபடலாம்.)
இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை உங்களிடத்தில் இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோனை பெறுவது சிறந்ததாகும்.
Read more: உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்