குரூப் 4 தேர்வு என்றால் என்ன

group 4 exam in tamil

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசு சார்ந்த ஓர் அமைப்பாகும்.

இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையமாகும். 1929 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓர் சட்டத்தின் மூலம் உருவாக்கம் பெற்றது.

அப்போது இது The Madras Service Commission என அழைக்கப்பட்டது. பின்னர் இது Madras Public Service Commission எனப் பெயர் மாற்றப்பட்டது.

TNPSCக்கு 4 தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என்பனவையே அவை நான்குமாகும். இதில் தமிழக அரசுத்துறையில் நான்காம் பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடாத்தி வருகின்றது.

இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், மற்றும் நில அளவர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை TNPSC ஆண்டுத்தோறும் மேற்கொண்டு வருகின்றது.

குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எழுத்துத் தேர்வானது இரண்டு பகுதிகளாக நடைபெறும்.

இதில் முதல் பகுதி தமிழ்மொழித் தகுதி தேர்வு ஆகும். இதில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். இதில் ஆகக் குறைந்தது 40% மதிப்பெண் எடுத்தால்தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.

இரண்டாவது பொது அறிவுப் பகுதி. இதிலும் 100 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறிவு (Aptitude Test) வினாக்களும் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது.)

குரூப் 4 தேர்வு என்றால் என்ன

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.

தேர்வுக்கான தகுதிகள்

கல்வி மற்றும் வயது போன்றவை தேர்வு எழுதுவதற்கான தகுதிகளாக உள்ளன. குரூப் 4 தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதானது விண்ணப்பதாரியின் கல்வி மற்றும் பிரிவைப் பொறுத்து மாறுபடும்.

குரூப் 4 பாடத்திட்டத்தை syllabus பத்தாம் வகுப்பு தரத்தில் TNPSC வடிவமைத்துள்ளது. குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும்.

குரூப் 4 தேர்வு எழுதுவதற்கு ஒருவருக்கு அடிப்படை தகுதி இருந்தால், அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம்.

Read more: தேர்ச்சி என்றால் என்ன

பேரூராட்சி என்றால் என்ன