பீடை என்றால் என்ன

பீடை என்றால் என்ன

நோய், துன்பம் எனப் பொருள் கொள்ளலாம். சோதிடத்தில் கிரகத்தால் ஏற்படும் பாதிப்பினையும் பீடை என்பர்.

பீடை விலக பரிகாரம்

உடல் சோர்வு, தீராத நோய், தினமும் மருந்து, மாத்திரை சாப்பிட்டு உடல் நிலை தீராதவர்கள், சோர்ந்து போய் இருப்பவர்கள், ஏதோ பேய் அறைந்தால் போல் இருப்பவர்கள், சோகமாக இருப்பவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இப்பரிகாரத்தைச் செய்யலாம்.

பாதிக்கப்பட்டவரை கிழக்குப் பார்த்தால் போல் அமர வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் செம்பில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அச்செம்பு நீரை தலையின் மேலாகச் சுற்றி விட்டு, ஒரு கைப்பிடி அளவு கோதுமை மாவை எடுத்து அவரது தலைக்கு மேல் வலது புறமாக ஏழு முறை சுற்றி அந்த கோதுமையை பசு மாட்டிற்கு போட வேண்டும். அப்படி இல்லை என்றால் காக்கை, குருவிகளுக்கு சாப்பிட வைத்து விடலாம்.

தலையைச் சுற்றிய செம்புத் தண்ணீரை மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றி விடலாம். இதே போல் தொடர்ந்து ஏழு நாட்கள் இப்பரிகாரத்தை செய்து வந்தால் பீடை நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

தண்ணீரையும் கோதுமையையும் எடுத்து சுற்றும் போது சுற்றுபவர்கள் மனதில் அந்த நபருக்கு இருக்கக்கூடிய குறிப்பிட்ட சங்கடங்கள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு சுற்ற வேண்டும்.

சுற்றி போட யாரும் இல்லை என்றால் நீங்களே உங்களுக்கு சுற்றி இந்த பரிகாரத்தை செய்து கொண்டாலும் தவறில்லை.

பீடை ஒழிய கடைப்பிடிக்க வேண்டியவை

நம் வீட்டில் வைத்திருக்க கூடாது என மஹா பெரியவர்கள் அறிவுறுத்திய ஒரு சில வழிமுறைகள் உள்ளன.

பொதுவாக ஒருவர் வீட்டில் எல்லாவிதமான பொருட்களும் இருக்கும். அதில் ஒரு சில பொருட்கள் சேதமானதாக இருக்கும். சில பொருட்கள் நல்ல பொருட்களாக இருக்கும். அப்படி சேதமான பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது. அதன் மூலமாக துன்பம் அதிகமாகும்.

எப்போதும் வீட்டுக்குள் உடைந்த வளையல் துண்டுகள் இருக்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் அதிகமானவர்கள் கண்ணாடி வளையல் அணிகின்றனர். அவ்வாறு போடும்போது நம்மை அறியாமலேயே வளையல்கள் உடைந்து விடும். அந்த உடைந்த வளையல்த் துண்டுகளை வீட்டில் வைக்காமல் அதனை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

பூஜை அறையில் உள்ள படங்கள் கண்ணாடி இல்லாமல் அல்லது, உடைந்திருந்தால் உடனடியாக அந்த படங்களுக்கு புதிய கண்ணாடிகளை மாற்ற வேண்டும். மற்றும் உடைந்த சுவாமிச் சிலைகளும் வீட்டில் இருக்கக் கூடாது.

அது போல் வீட்டில் உள்ள பறணில் பல பொருட்களை போட்டு வைத்திருப்போம். அதில் அதிகம் துருப்பிடித்த பொருட்கள் இருக்கக்கூடாது அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் தோட்டம் அல்லது, செடி வைத்திருப்போம். அதனை நன்றாக பராமரிப்போம். எனினும், ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமலே அந்த செடி வாடிப் போய்விடும். காய்ந்து போன செடி, கொடிகளை வீட்டில் வைக்கக் கூடாது. அது வாடி காய்ந்து போவது போல் நம் குடும்பமும் காய்ந்து வாடிப் போய்விடும். வீட்டில் வளர்க்கும் செடி எந்தளவிற்கு செழிப்பாக இருக்கின்றதோ அதேபோல் செழிப்பு குடும்பத்திலும் இருக்கும்.

வீட்டில் விளக்கு ஏற்றும் நேரங்களில் சாப்பிடக்கூடாது. விளக்கேற்றி வைத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே சாப்பிட வேண்டும். இவற்றை முறையாக கடைப்பிடிக்கும் போது வீட்டில் பிடித்திருக்கும் பீடை ஒழியும்.

Read More: பாவங்கள் போக்கும் நதி

சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு