Table of Contents
பயன்பாடு என்றால் என்ன
பயன்பாடு என்ற போது ஒரு பொருளை பயன்படுத்துவது அல்லது ஒரு பொருளிலிருந்து பயன் கிடைப்பது என கூறலாம்.
ஆனால் பொருளியலைப் பொருத்தவரையில் பயன்பாடு என்றால் ஒரு பொருளையோ அல்லது பணியைப் பயன்படுத்தும் போது நமக்கு கிடைக்கும் மனநிறைவே பயன்பாடு எனப்படுகின்றது.
உதாரணமாக ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் போது நன்றாக இருக்கின்றது என நினைத்தால் அது பயன்பாடாகும். வங்கிக்குச் செல்லும் போது சென்ற காரியம் விரைவாக நிறைவடைந்தால் மிகவும் சந்தோஷப்படுவது பயன்பாடாகும்.
பயன்பாட்டின் இயல்பு
பயன்பாடு என்பது உளவியல் சார்ந்தது. பயன்பாடும் உபயோகமும் ஒன்றல்ல.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர் புகைப்பிடிப்பதனால் சிகரெட்டின் மூலம் அவருக்கு பயன்பாடு கிடைக்கலாம். அதாவது அதை பயன்படுத்தும் போது அவருக்கு மனநிறைவு கிடைக்கலாம். அதே வேளை அவருக்கு உபயோகமில்லை.
அதாவது நன்மை கிடைக்குமா என்றால் இல்லை. ஏனெனில் புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
பயன்பாடும் மகிழ்ச்சியும் ஒன்றல்ல. இவை இரண்டுமே தனித்தனியானவையாகும். உதாரணம் நோயுற்ற ஒருவன் மருந்துகளை உண்பார் என்று நாம் எடுத்துக்கொண்டால் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயினுடைய தாக்கம் அல்லது தீவிரம் குறைந்து கொண்டு போகின்றது என மனனிறைவடையலாம். அதே நேரத்தில் மருந்துகளை உண்பது மகிழ்ச்சியைக் கொடுக்காது.
பயன்பாடு என்பது மனித விருப்பத்தை சார்ந்தது. உதாரணமாக பசியோடு இருக்கும்போது நாம் ஒரு உணவுப் பொருளைக் கொடுத்தால் அது பயன்பாட்டை கொடுக்கும்.
அதேநேரத்தில் பசியில்லாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு உணவுப் பொருளை கொடுத்தால் அது பயன்பாட்டை கொடுக்காது. எனவே பயன்பாடு என்பது மனிதனது விருப்பத்தின் தீவிரத்தை சார்ந்தது.
பயன்பாடு என்பது நீதிநெறி, ஒழுக்கநெறி, முக்கியத்துவம் சார்ந்ததல்ல. உதாரணம் கத்தியை சமையல்காரன் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்துகின்றான். கொலைகாரன் தனது எதிரியை தாக்க பயன்படுத்துகின்றார்.
மனிதனின் விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டம் மட்டுமே பயன்பாடு கொண்டுள்ளது என பொருளியல் கருதுகின்றது.
பயன்பாடு தனித்தும், சார்ந்து இருக்கும். ஒரு தனிநபர் ஒரேவிதமான பண்டத்திலிருந்து பெறும் பயன்பாடானது இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். ஒரு உணவு தரும் பயன்பாடு அந்த உணவை அருந்தும் சூழலைப் பொறுத்து அமையலாம்.
பயன்பாட்டின் வகைகள்
வடிவப் பயன்பாடு, கால பயன்பாடு, இடப் பயன்பாடு, உடம்பைப் பயன்பாடு, அறிவு பயன்பாடு, சேவைப் பயன்பாடு எனப் பல வகைப்படும்.
வடிவ பயன்பாடு என்பது சில பொருட்களினடைய வடிவத்தை மாற்றும் போதுதான் அதை மனநிறைவைத் கொடுக்கக் கூடியது. உதாரணம் பருத்தியை உடையாக அல்லது துணியாக மாற்றும் போது பயன்பாடு கிடைக்கும்.
கால பயன்பாடு என்பது சில பொருட்களோ அல்லது பணிகளோ குறிப்பிட்ட காலத்தில் பயன் தரமாட்டாது. சிறிது காலம் சென்ற பின்புதான் பயனைக் கொடுக்கும். அதுவே காலப் பயன்பாடாகும்.
உதாரணம் ஒருவரிடம் இரத்தத்தை தானமாகப் பெற்று ரத்த வங்கியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது செலுத்தப்படுகின்றது.
இடப் பயன்பாடு என்பது ஒரு பொருள் ஒரு இடத்தில் இருக்கும்போது பயன்பாடு இருக்காது. அது வேறு இடத்தில் செல்லும் போது பயன்பாட்டை கொடுக்கும்.
உடம்பைப் பயன்பாடு என்பது உற்பத்தியாளர்களிடமிருந்து பொருளைப் பயன்படுத்த கூடிய நபருக்கு மாற்றும்போது பயன்பாடு கிடைத்தால் அது உடமைப் பயன்பாடாகும்.
Read more: மணத்தக்காளி கீரை பயன்கள்