காற்று மாசுபாடு என்றால் என்ன

kaatru masupadu in tamil

அறிமுகம்

உலகில் உயிர்கள் வாழ காற்று இன்றியமையாததாகும். காற்று எங்கும் நிறைந்திருக்கும். தாவரம் முதல் ஆறறிவுடைய மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் காற்று முக்கியமானதாகும். காற்று இல்லையெனில் எந்த உயிரும் வாழ முடியாது.

நாம் அனைவரும் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவே விரும்புவோம். நாம் சுவாசிக்கும் காற்றில் 0 முதல் 50 வரை தரக்குறியீடு இருந்தால் அது சுவாசிக்க நல்ல காற்றாகும். மாசுபட்ட காற்றில் பலவிதமான நுண்துகள்கள் இருக்கும்.

காற்றில் இருக்கக்கூடிய இந்த நுண்துகள்கள் PM என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. PM என்பது Particulate Matter என்பது பொருள். காற்றில் மிதக்கும் திடப்பொருட்கள் மற்றும் திரவத் துளிகளின் கலவைக் கணக்கெடுப்பே PM என சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் ஒரு மீற்றர் சதுரப் பரப்பளவில் 10 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் இருந்தால் அது சுவாசிக்க நல்ல காற்று ஆகும். கண்ணுக்கே தெரியாத பெரிய மற்றும் சிறிய அளவிலான இந்த நுண்துகள்கள் நாம் சுவாசிக்கும் போது நம்முடைய மூக்கு, மூச்சக் குழாய், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடும்.

இந்த மாசுபட்ட காற்றின் காரணமாக ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற தீவிர சுவாசப் பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படும்.

காற்று மாசுபாடு என்றால் என்ன

உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் காணப்படுமாயின் அதுவே காற்று மாசுபாடாகும்.

காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள்

பொது வெளியில் விவசாயக் கழிவுப் பொருட்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை எரிப்பதும், கடுமையான வாகனப் பெருக்கம், பட்டாசுப் புகைகள், தொழிற்சாலைப் புகைகள், பிளாஸ்டிக் பயன்பாடு, வரண்ட வானிலை போன்ற பல காரணங்கள் காற்று மாசுபாட்டிற்குக் காரணங்களாக அமைகின்றன.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புக்கள்

மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்குப் பசுபிக் நாடுகள் போன்றவை அதிக காற்று மாசுபாடுடைய நாடுகளாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாட்டால் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய்விடுகின்றது. இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் ஏற்படும்.

  • காற்று மாசுபாட்டால் மனித ஆயுட்காலம் குறைவடைந்து கொண்டே வருகின்றது.
  • காற்று மாசுபாட்டால் மண்ணின் அமிலத் தன்மை அதிகரிக்கின்றது.
  • தாவரங்கள் உயிர் வாழ முடிவதில்லை, காடுகள் பயிர்களை அழிக்கின்றது.
  • விவசாய உற்பத்தித் திறன் குறைகின்றது.
  • கட்டிடங்கள், சிலைகள், நினைவுச் சின்னங்கள், ரயில் தண்டவாளங்கள், மேம்பாளங்கள் போன்றன அரிக்கப்படகின்றன.

அதிவேக விமானங்களால் வெளியிடப்படும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைட்டும், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றிலிருந்து வெளிவரும் CFC காபனும் ஓசோன் படலத்தை சிதைப்பதன் விளைவாக மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தோல் புற்றுநொய் ஏற்படுகின்றது.

இந்தியாவில் சராசரியாக 3 கோடி மக்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆஸ்துமா நோயால் பாதிப்படைகின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தால் காற்று மாசுபாட்டை ஓரளவிற்கேனும் குறைக்க முடியும்.

நன்கு பசுமையாக அடர்ந்து வளரும் மரங்களை நட வேண்டும். விரிவாக்கம் என்ற பெயரில் மலைகளையும், காடுகளையும் அழிக்கக் கூடாது.

காற்று மாசுவிலிருந்து எதிர்வரும் சந்ததிகளைப் பாதுகாக்க அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டியது தலையாய கடமையாகும்.

You May Also Like :
காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்
காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை