தமிழ் பயன்பாட்டில் காணப்படும் சொற்களில் பகைவன் என்ற சொல்லும் ஒன்றாகும். பகைவன் என்பவன் பெரும்பாலும் தீங்கு விளைவிப்பவனே பகைவன் ஆவான்.
மேலும் பகைவர் அல்லது எதிரி என்பவர் தங்களுக்கு எதிராக அல்லது அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்களை குறிப்பிடும் சொல்லாகும். இந்தச் சொல் பொதுவாக போர்ச் சூழலில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது.
ஒருவன் நன்மை செய்ய விளைகின்றான் எனின் அவனுக்கு எதிராக செயற்படுபவனே பகைவன் ஆவான். ஒருவனுக்கு நண்பன் என்பவன் எவ்வாறு அவசியமோ அது போலவே பகைவனும் அவசியமாகின்றான்.
ஒருவன் பகைவனிடம் இருந்தும் பல பாடங்களை கற்றுத் கொள்ள முடியும். மனிதருக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பகமையான விலங்குகள் காணப்படுகின்றன. எலிக்கு பூனை எப்போதுமே பகையாகத்தான் காணப்படுகின்றது.
அது போல நாடுகளுக்கும் பகை நாடுகள் காணப்படுகின்றது. இதனாலேயே ஆரம்ப காலங்களில் போர் மூண்டது. அன்று மட்டும் அல்ல இன்றும் நாடுகளுக்கிடையில் சண்டை ஏற்பட பகைமையே காரணம் ஆகும்.
எனவே இவ்வாறான பகைவன் என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
பகைவன் வேறு சொல்
- எதிரி
- விரோதி
- மாற்றான்
- எதிராளி
- அரி
எதிரி பற்றிய மேற்கோள்கள்
- பகைவருள் சிறு பகைவன் என்பது கிடையாது.
- ஒரு பகைவனை வெல்வதைக்காட்டிலும் அவனைத் திருப்புவது மேல். வெற்றி அவனுடைய விடத்தைப் போக்கலாம். ஆனால் அவனைத் திருத்தி வசப்படுத்திக்கொள்வதில், அவனுடைய உள்ள உறுதியே போய்விடும்.
- உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குறைகளை முதலில் கண்டிப்பவர்கள்.
- நாம் சந்தேகிக்காத எதிரியே மிகவும் அபாயகரமானவன்.
- நம்மைவிட நம் எதிரிகள் பெற்றுள்ள அதிக நல்ல குணங்களை நாம் கவனித்து வரவேண்டும். குறைகளை நீக்கிக்கொண்டு. அவர்களுடைய நல்ல குணங்களை நாம் அவர்களிலும் அதிகமாகப் பெறவேண்டும்.
எதிரி பற்றிய பழமொழிகள்
- உனக்கு ஐம்பது நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் போதமாட்டார்கள் உனக்கு ஒரு பகைவன் இருக்கிறானா? அவனே அதிகம்! -இத்தாலியப் பழமொழி
Read more: கார்த்திகை மாத சிறப்புகள்