நோய் வரக் காரணங்கள்

noi vara karanangal in tamil

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும்.

நமது உடல் இயல்பாகவே தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று பரிமாணங்களுக்கும் சேர்த்து நிலையான, முழுமையான நலவாழ்வை உறுதிப்படுத்துவதே ஆரோக்கியமான வாழ்வாகும்.

எனினும் ஆரோக்கியமான வாழ்விற்கு பங்கம் விளைவிப்பதாக பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. நோய்கள் ஏற்படக் காரணங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள்

நோய் வரக் காரணங்கள்

#1. ஓய்வின்மை

இன்றைய காலச் சூழலில் அனைவரும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சரியான ஓய்வினை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

#2. மாசு நிறைந்த சுற்றுச் சூழல்

வளி, மண் மற்றும் நீர் மாசுபாட்டால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. குழந்தைகளின் மூளையை பாதிக்கும் நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.

#3. வாழ்க்கை முறை

நடைமுறை வாழ்கை சரியில்லாமல் போனால் அது உடலில் நோயை ஏற்படுத்திவிடும் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கு வழிகோலும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களினால் உடலில் பல நோய்கள் உண்டாகின்றன.

புற்றுநோய், இதய நோய் போன்ற பல கொடிய நோய்கள் ஏற்படுவதற்கு தவறான வாழ்க்கை முறை காரணமாகிறது.

#4. மன அழுத்தம்

உணர்ச்சிகள் நமது மனதிலும், உடலிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தம் காரணமாக ஏற்கனவே இருந்த நோய்கள் மேலும் கூடுவதற்கும், புதிதாக நோய்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

உதாரணமாக எக்ஸிமா என அழைக்கப்படும் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், உயர் ரத்த அழுத்தம், குடல்புண் போன்ற நோய்கள் மன அழுத்தத்தினால் மேலும் கூடும்.

இதேபோல் மன அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் நோய்க்கும் மார்பு வலி உதாரணம் ஆகும்.

#5. மரபணு

மரபணு சார்ந்த நோய்கள் பெற்றோரிடமிருந்தோ, ஒருவரின் வாழ்நாளில் ஏற்படும் சீரற்ற நிகழ்வுகளின் மூலமாகவோ, மோசமான சுற்றுச்சூழல்களாலோ உருவாகின்றன. இரத்த சோகை, நிறக்குருடு ஆகியவற்றை மரபணு சார்ந்த நோய்களுக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

#6. நாள்பட்ட நோய் காரணிகள்

மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நீடிக்கும் நோய்களே நாள்பட்ட நோய்களாகும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து களையாமல் விட்டால், தொடர்ச்சியாக நோய்கள் உடலில் இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உணவு உட்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், போன்றவற்றை நாள்பட்ட நோய்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

#7. உணவுப் பழக்கவழக்க மாற்றம்

அதிக வேலைச் சுமை காரணமாக இன்று காலை உணவைத் தவிர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இச்செயற்பாடு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

#8. செயற்கை உரங்கள்

இன்று விவசாயத்தில் அதிக விளைச்சலுக்காகவும், வருமானத்திற்காகவும், புதிய விதைகளின் உருவாக்கம், போன்றவற்றிற்காக இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் பெறப்படும் உணவு உற்பத்திகளால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

#9. சுத்தம் இன்மை

அதிகரித்த வேலை சுமை காரணமாக இன்று சுத்தத்தை மறந்து விடுகின்றோம். எப்போதும் சுத்தத்தைப் பேணும் போதுதான் உடல் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும் வாழ முடியும்.

தொற்று நோய்களான சளி, கொரோனா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமின்மையே காரணமாகும்.

#10. துரித உணவு பழக்க வழக்கம்

இன்றைய நாகரிக உலகில் இயற்கை உணவுகளை மறந்து துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதற்கு பழகிவிட்டோம். இவை பல நோய்களை உடலுக்கு ஏற்படுத்துகின்றன.

You May Also Like :
மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்