நம் முன்னோர்கள் பாரம்பரியமாக மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்த இலைதான் இந்த நொச்சி இலை. நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் முக்கியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என சில வகைகள் உள்ளன.
நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம் ஆகிய பெயர்களும் நொச்சிக்கு உண்டு.
நொச்சி இலையின் பயன்கள்
1. மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றைக் குணமாகும் – ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள், சிறிதளவு நெய் சேர்த்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
2. தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, சைனஸ் ஆகியவற்றை நொச்சி இலை விரைவில் குணப்படுத்துகிறது – நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க நல்ல பலன் கிடைக்கும்.
3. பிரசவித்த பெண்களின் உடலுக்கு சிறந்த பயன் தரும் – கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம். நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்.
4. பெண்களின் மலட்டுத் தன்மையைப் போக்கி கர்ப்பம் உண்டாக பயனளிக்கும் – கருநொச்சிச் சாறு, கரிசாலைச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய், பசு நெய் இவற்றை வகைக்கு 100 மில்லியும், நெருஞ்சில் விதை, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வகைக்கு 6 கிராமும் எடுத்து இடித்துக் கலந்து காய்ச்சி வடிகட்டி அதை மாதவிலக்கான 3 நாட்களும் 16 மில்லி அளவு குடித்து வர மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் உண்டாகும்.
5. பீனிசம் – நொச்சிச்சாறு, கரிசாலைச்சாறு 500 மில்லி, சிற்றரத்தை, சுக்கு, ஆமணக்கு வேர், தேற்றாங்கொட்டை 15 கிராம் எடுத்து, வெள்ளாட்டுப் பாலால் அவற்றை அரைத்து சாறு பிழியவும். இந்தச் சாற்றைக் காய்ச்சி வடிகட்டி, இதைக் கொண்டு தலைக்குக் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
6. மலேரியா சுரத்தைத் தணிய வைக்கும் – நொச்சி இலையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும்.
7. கட்டி வீக்கம் – நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும், வீக்கம் குறையும்.
8. காய்ச்சலைக் குணப்படுத்தும் – நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
9. ஆஸ்துமா பிரச்சனை குணமாகும் – இதற்கு மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வரவேண்டும்.
You May Also Like : |
---|
வேப்பம் பூ மருத்துவ பயன்கள் |
செம்பருத்தி இலையின் பயன்கள் |