சிதம்பரம் கனகசபை என்றால் என்ன

chidambaram kanagasabai

சிதம்பரம் கனகசபை என்றால் என்ன

கனகசபையானது தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்ப பெயராக காணப்படும். இது இந்தியாவின் தமிழ் நாட்டில் காணப்படுகின்றது.

சிதம்பரம் கனகசபை என்றால் என்ன

சிதம்பரம் கனகசபை என்பது தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் உள்ள சைவ சமய கடவுளான சிவன் கோவிலில் உள்ள அவையின் தமிழ் பெயரே சிதம்பரம் கனகசபை எனப்படும். இந்த கோவிலில் பிரதான தெய்வமானவர் நடமாடும் வடிவத்தில் காணப்படுகிறார். சிதம்பரம் கோவிலினை கனகசபை என்று அழைப்பதும் உண்டு.

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலே சிதம்பர நடராஜ கோயிலாகும். இதனை இந்தஸ்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் சிவபெருமானுக்கு புகழ் பெற்ற கோயில்களில் இக் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலானது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாகும். இந்த சிதம்பர கோயிலின் கட்டிடக் கலையானது ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையிலான தொடர்பினை பிரதிபலிக்கின்றது.

இக்கோயிலில் 5 முக்கிய சபாக்கள் காணப்படுகின்றன. அதாவது கனகசபை, சித்தசபை, நிருட்டசபா, தேவசபா, ராஜசா போன்றவையாகும். இந்த ஸ்தலத்தில் உள்ள நடராஜர் உருவம் சிவனின் மிக முக்கிய வடிவங்களில் ஒன்றாகும்.

இக்கோயிலானது 40 ரக்கர் பரப்பளவில் நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும் ஐந்து சபைகளையும் கொண்டமைந்து காணப்படுகின்றது. இங்கு மூலவர் சிலை இருக்கும் இடத்தினையே கனகசபை என்று அழைக்கின்றனர்.

இந்த சபை முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது அதன் காரணமாக பொன்னம்பலம் என இச்சபையை அழைக்கின்றனர்.

சிதம்பரம் கனகசபை வழிபாடு

திருவாரூர் தியாகராஜர் சுவாமியை தவிர உலகில் உள்ள அனைத்து சிவ கலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்து காலையில் புறப்பட்டு இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன என்று நம்பப்படுகின்றது.

இதன் காரணமாகவே மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக் கோவிலில் அர்த்தசாம பூசை நடைபெறுகின்றது.

மேலும் சிதம்பரம் கனகசபையில் பல்வேறு சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்த சாம பூஜையில் கலந்து கொள்வது ஈடானதாக கருதப்படுகின்றது.

ஆறு கால பூஜை

சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆறு கால பூஜை என்பது காலை சந்தி இரண்டாங் காலம், உச்சி காலம், சாயங் காலம், ரகசிய பூசை காலம், அர்த்த சாமம் போன்றவையாகும்.

சைவப் பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும் நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் வைணவ கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில் நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட வகையில் சிதம்பர கோயில் பூஜையானது காணப்படுகின்றது.

சிதம்பர கனகசபையும் இன்றைய நிலையும்

சில நாட்களுக்கு முன்னர் சிதம்பர கனகசபை மேடையின் மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட பதானக சர்ச்சையை ஏற்படுத்தியது.

பக்தர்கள் புகரால் பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் நலன் கருதியே இவ்வாறான போர்டு வைக்கப்பட்டது. மேலும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டு வருகின்றனர்.

Read More: பாவங்கள் போக்கும் நதி

திருமண் என்றால் என்ன