பிளாஸ்டிக்கோஸ் என்ற சொல்லிலிருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழியை முதன் முதலில் 1862ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல மாறுதல்களுக்கு உட்பட்டு, 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும், பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் நெகிழிப் பயன்பாட்டில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
Table of Contents
நெகிழி என்றால் என்ன
Plastic என்பதே தமிழில் நெகிழி எனப்படுகின்றது. நெகிழி என்பது ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகிய நிலையை அடைவதைக் குறிக்கும் சொல்லாகும். வார்க்கத்தக்க ஒரு பொருள் என்ற பொருள் தரும்.
நெகிழிப் பயன்பாடும் தீமைகளும்
ஏராளமான பரிணாமங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. குறைந்த விலையில் நெகிழிப் பொருட்கள் கிடைப்பதாலும், பயன்படுத்த வசதியாக இருப்பதாலும் மக்கள் இவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் நெகிழிப்பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லியன் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நெகிழி இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதன் பயன்பாடு உள்ளது. ஒரு நெகிழிப்பை அழிய 15 தொடக்கம் 100 ஆண்டுகள் வரை எடுக்கும்.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டில் வைத்து உண்ணும் போது அதில் உள்ள இரசாயனம் உடலுக்குள் சென்று பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளன.
[Carry bags, Straw, Cups, Plates, Spoon] நிலம், நீர் ஆகியவற்றிற்கு இவ்வகை நெகிழிகளே மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.
நெகிழி இல்லாத உலகம் என்பது சரியாகாது என்றும், நெகிழி இல்லாத சமூகம் என்பது தற்பொழுது சாத்தியம் இல்லை என்றும், நெகிழி மிகச்சிறந்த மாற்றுப்பொருள் என்றும் நெகிழியை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.
நெகிழி மாற்றாக இல்லாவிட்டால், மரப் பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும்.
அப்பொழுது இயற்கைக்கு ஆதாரமான மரம் வெட்டப்படும், இயற்கை வளங்கள் அழிக்கப்படும், காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.
சுற்றுச்சூழலை அதிகளவு பாதிப்பது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் ஆகும்.
உணவகங்களிலும், கடைகளிலும் வாங்கப்படும் சாம்பார், சட்னி உணவுப் பொருட்களை பார்சலில் கட்டி கொடுக்கபடுவதில் இருந்து, கடைகளில் வாங்கப்படும் சேம்பு உள்ளிட்ட சிறிய பொருட்கள் வரை நெகிழி பயன்படுத்தப்படுகின்றது.
எனவே முதலில் நெகிழிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். பாரம்பரிய முறைக்கு நாம் மாறுவது இதற்கு சிறந்த வழியாகும்.
சனலால் உருவாக்கப்படும் பைகளைப் பயன்படுத்தலாம். மெல்லிய துணிப் பைகளைப் பயன்படுத்தலாம்.
மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியவன் அவன் நெகிழிப் பயன்பாடு எனும் பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். எனவே பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் மஞ்சள் பைக்கு மாறுவோம்!
Read more: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கட்டுரை