நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை

நான் ஒரு விஞ்ஞானி ஆனால்

இந்த பதிவில் “நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை பதிவுகளை காணலாம்.

எதிர்காலத்தில் நான் ஒரு விஞ்ஞானி ஆனால் பல புதிய விடயங்களை கண்டுபிடித்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இல்லாமல் செய்வேன்.

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை – 1

இந்த உலகம் இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்று காணப்படுவதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் தான் காரணமாகும். நாம் தினமும் பாவிக்கின்ற எல்லா சாதனங்களும் சிறந்த கண்டுபிடிப்புகளாகும்.

ஆகவே நான் ஒரு விஞ்ஞானி ஆனால் பல புதிய விடயங்களை கண்டுபிடிப்பேன். அவற்றின் வாயிலாக எமது நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இல்லாமல் செய்வேன். இன்று எம்முடைய உலகை தாக்கும் தொற்று நோய்களை நிரந்தரமாக இல்லாமல் செய்ய கூடிய மருந்துகளை கண்டுபிடிப்பேன்.

இதன் வாயிலாக பல மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும். இந்த உலகமும் வளமைக்கு திரும்ப முடியும். அவ்வாறே மருத்துவ துறையில் எமது நாட்டில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக என்னால் முடிந்த மருத்துவ சாதனங்களை கண்டுபிடிக்க முயல்வேன்.

எமது நாட்டை அழகற்றதாக மாற்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை மீழ்சுழற்சி செய்து அழிக்க கூடிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பேன். இவற்றின் மூலமாக எமது நாட்டில் மாசடைந்துள்ள நகரங்களை அழகாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

மாசடைந்துள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்த உரிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பேன். இதன் வாயிலாக எமது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.

மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனங்களை இல்லாது செய்து விவசாய துறையில் இயற்கையான உரங்கள், விதைகள், கிருமிநாசினிகள் போன்றவற்றை கண்டு பிடிப்பேன். இதன் வாயிலாக எமது நாட்டு மக்கள் நஞ்சற்ற உணவுகளை உண்ணுவார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.

அது போல மின்சார உற்பத்திக்காக பயன்படும் அனல்மின் நிலையங்களை விடுத்து சூரிய மின்கலங்களை அதிகளவில் உருவாக்குவேன். இவ்வாறு எமது நாட்டுக்கு தேவையான கண்டுபிடிப்புக்களை முடிந்தவரை செய்வேன்.

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை – 2

எமது உலகம் இன்று பெரியளவிலான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனாலும் இது எல்லோருக்கும் நன்மை தரவில்லை பல பாதகமான எதிர் விளைவுகளை தான் தருகிறது. உதாரணமாக ஆயுதங்களை கண்டு பிடிப்பதனால் உலகில் போர்கள் தோன்றி ஏராளமான உயிர்கள், உடமைகள் அழிக்கப்படுகின்றன.

நான் விஞ்ஞானியானால் மனிதர்களுக்கு பாதகம் இல்லாதவற்றை கண்டுபிடிப்பேன். இன்று எமது உலகம் வளி மாசடைதல், சூழல் வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை எதிர் கொள்கின்றது.

காற்றினை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை கண்டுபிடிப்பேன். இதனால் எமது பூமி நாம் வாழ்வதற்கு ஏற்ப தூய்மையாக இருக்கும். எரிபொருள்கள் இன்றி சூரிய ஒளியினால் இயங்கும் வாகனங்களை கண்டுபிடிப்பேன் இதனால் காற்று மாசடைதல் குறையும்.

விவசாயத்தில் பயன்பட கூடிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதனால் அதிகளவான உணவு பொருட்களை உற்பத்தி செய்து. ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் செய்வேன்.

மற்றும் வீணாக போகும் பழுதடையும் உணவுகளை பழுதடையாமல் பாதுகாத்தால் உணவு பஞ்சம் இல்லாது தடுக்க முடியும். வாகனங்களை மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைப்பதன் வாயிலாக விபத்துக்கள் மூலமாக இடம் பெறும் உயிரிழப்புக்களை தடுப்பேன்.

எமது நாட்டில் வாழ்கின்ற அனைவரும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் கண்காணிக்கும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குவேன். இதன் மூலம் தவறு செய்பவர்களை சட்டத்தின் மூலமாக தண்டனை வழங்க முடியும். மற்றும் நாட்டில் குற்ற செயல்கள் இடம்பெறாமலும் தடுக்க முடியும்.

பெண்கள் குழந்தைகள் போன்றவற்றிற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் இருக்க இது உதவியாக இருக்கும். இவ்வாறு நான் பல கண்டுபிடிப்புகளை செய்யும் சிறந்த விஞ்ஞானியாக வருவேன்.

You May Also Like :

நான் ஒரு வானூர்தி கட்டுரை

நான் ஒரு பறவையானால் கட்டுரை