நற்செயல் என்றால் என்ன

narseyal in tamil

நற்செயல் என்றால் என்ன

நம் வாழ்வில் நாம் பிறருக்கு நன்மை புரியும் நோக்குடன் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியும் மகத்தான பயனை பெற்றுத் தருகிறது. நற்செயல்களின் மூலமாகத்தான் நாம் நம் சமூகத்தை நல்வழிபடுத்த முடியும்.

நாம் எந்தெந்த விதங்களில் நற்செயல்கள் செய்கின்றோம் என்பதை விட அவைகளுக்கேற்ற மனோபாவங்கள் நமக்கு உண்டா என்பது மிகமுக்கியம்.

நற்பண்புகளை பின்னனியாக கொண்டிராத எந்த ஒரு நற்செயலும் சுயநலம் சார்ந்ததாகவும், மறைவான ஆதாயங்களை நோக்கமாக கொண்டதாகவுமே இருக்கும்.

எப்பொழுதும், யாருக்கும் மனதால் கூடத் தீமை செய்யாமல் இருப்பதுவே சிறந்தது. கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைபோல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் பொழுது, உதவி செய்பவர்கள் உதவி செய்வதனால் தனக்கு என்ன பயன் என்று கருதாமல் உதவி செய்ய வேண்டும்.

பொதுவாக பிறருக்கு உதவி செய்வது ஒரு நற்செயல். அந்த நற்செயலை செய்வதனால் புண்ணியம் கிடைக்கும்.

இறையின் நேரடி வெளிப்பாடாகிய இந்த இயற்கையானது எவ்வாறு எல்லா உயிரினங்களுக்கும் பாராபட்சமின்றித் தன் கொடைகளை அள்ளி வழங்குகிறதோ, அவ்வாறே நாமும் பிறருக்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

ஏனெனில் இந்த இயற்கையின் படைப்பில் நாமும் ஒரு அங்கமேதான். அவ்வாறிருக்கும் போது இத்தகைய இயல்பான நம் செயல்களுக்குப் பின்னால் பலன்கள் கருதிய நோக்கம் இருப்பது சரியானதல்ல.

நற்செயல் என்றால் என்ன

ஒரு செயல் நன்னடத்தையுடன் இருத்தல் நற்செயல் என சுருக்கமாக கூறலாம். அதாவது கொலை செய்வதைத் தவிர்த்தல், திருடுவதைத் தவிர்த்தல், நேர்மையுடன் நடந்து கொள்ளல், பிறருக்கு உதவி செய்தல், நல்ல சிந்தனைகளை சிந்தித்தல் இவை போன்றவையே நற்செயல்கள் ஆகும்.

நற்செயல்களின் பலன்கள்

“நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் பலன் அளித்தே தீரும் என்பது என் உறுதியான நம்பிக்கை” என்கின்றார் காந்தியடிகள்.

நற்செயல்களைச் செய்யும்போது மன அமைதி கிடைக்கும். எண்ணங்கள், சூழ்நிலைகளால் ஏற்படும் அழுத்தங்கள் குறைந்திடும். இச்செயல்களைத் தொடர்ந்து செய்து வரும்போது சமுதாயக் கண்ணோட்டத்தில் ஒரு நன்மதிப்பைப் படிப்படியாகப் பெறலாம்.

நாமும் நல்ல மனிதர்தான் எனும் நம்பிக்கை நம்முள்ளேயே உருவாகிடுவதையும் காணலாம். இது காலப்போக்கில் தன்னம்பிக்கையும் தெளிவும் நிறைவுமுள்ள ஒரு மனிதராகவும் நம்மை ஆக்க வல்லது.

நற்செயல்கள் செய்பவர்கள் பொதுவாக நேர்மையானவர்களாக, தைரியமானவர்களாக, மதிப்புக்குரியவர்களாக, கருணை உள்ளவர்களாக இருப்பர்.

பல நூற்றாண்டு காலமாக சிந்தனையாளர்கள் பலர் பரிந்துரைத்த மகிழ்ச்சிக்கான வழி பிறருக்கு உதவுவது.

காக்கைக்கு சோறிடுவது தொடங்கி, ஒரு குழந்தை அதன் பிறந்தநாளுக்கான இனிப்பை பிறரோடு பகிர்வது போன்ற எல்லா சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பிறருக்கு கொடுப்பதை முன்னிலைப்படுத்தி நம் மனதில் பதியவைக்கப்பட்டவை தான்.

Read more: தனிமனித ஒழுக்கம் கட்டுரை

மாணவர் ஒழுக்கம் கட்டுரை