மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் கோபம், சந்தோஷம், அச்சம், மடம், நாணம் போன்ற பல குணங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான குணங்களில் இன்றியமையாத பண்பே தைரியம் ஆகும்.
தைரியம் என்ற சொல்லை பல அகராதிகள் பலவாறு வரையறை செய்கின்றன. அவ்வகையில் தைரியம் என்றால் என்ன என்று பார்க்கும் போது எதையும் துணிச்சலாக செய்து வெற்றி காண்பது தைரியம் எனலாம்.
மற்றும் ஆபத்து, துன்பம் என்பவற்றை தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை தைரியம் எனலாம். மற்றும் இன்னுமொரு அகராதியின் அடிப்படையில் தைரியம் என்பது குதிரையின் பெருமிதமான நடையைக் குறிக்கின்றது.
எவ்விடயத்தையும் சரிவரச் செய்வதற்கு தைரியம் மிகவும் அவசியம் ஆகின்றது. கூச்ச சுபாவமுல்ல மனிதனை மனவலிமை மிக்கவனாக மாற்றும் குணமே தைரியம். இது சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் காணப்படும்.
எடுத்துக்காட்டாக சிலர் பூனைக்குட்டியைக் கூட பிடிக்கப் பயப்படுவர் ஆனால் சிலர் பாம்பைக் கூட இலகுவான முறையில் பிடிப்பர். இதுவே தைரியம் எனலாம்.
இவ்வாறு தைரியமானது வெவ்வேறு முறையில் வேறுபட்டு அமைகின்றது. இவ்வகையில் தைரியத்திற்கு தமிழில் பல வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
தைரியம் வேறு சொல்
- துணிச்சல்
- வீரம்
- துணிவு
- சாகசம்
- தீரம்
- துணிகரம்
- மதர்ப்பு
- மனதிடம்
- மனோதிடம்
- மனோபலம்
- மிடுக்கு
- முறுக்கு
- உறுதி
- திடம்
இவ்வாறான பல பெயர்கள் தைரியத்திற்கு வழங்கப்படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.
Read more: அல்லி வேறு பெயர்கள்