இந்த பதிவில் தாளிசாதி சூரணம் பயன்கள், தாளிசாதி சூரணம் செய்முறை மற்றும் சாப்பிடும் முறை என்பவற்றை பார்க்கலாம்.
வாதம், கபம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை குணமாகும் வல்லமை தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.
இந்த தாளிசாதி சூரணம் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி தயாரித்து மாத்திரை வடிவில் தாளிசாதி வடகம் எனும் பெயரில் கிடைக்கிறது.
- தாளிசாதி சூரணம்
- Thalisathi Choornam Benefits In Tamil
கபசுர குடிநீர் காய்ச்சுவது எப்படி
Table of Contents
தாளிசாதி சூரணம் பயன்கள்
- நாள்பட்ட சளி, நுரையீரல் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றால் சிரமப்படுபவர்களுக்கு தாளிசாதி சூரணம் சிறந்த தீர்வாகும்.
- மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- காது இரைச்சல், மூக்கில் இருந்து நீர் வடிதல், தலை பாரம், நீர்க் கோவை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடலாம்.
- வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் இதை சிறிது நாட்கள் எடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
- பசியின்மை, அஜீரணம், வயிறுப்புண், அல்சர் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.
- வயிற்று வலி பிரச்சனை உள்ளவர்கள் இதை தொடர்ந்து எடுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
- சளி, இருமல் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும்.
- மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- வெள்ளைபடுதலை தடுக்கும்
தாளிசாதி சூரணம் பயன்படுத்தும் முறை
கால் பங்கு தாளிசாதி சூரண பொடியை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.
இதை மாத்திரை வடிவிலும் நாட்டு மருந்து கடைகளிலும் சித்த மருந்து கடைகளிலும் இருந்து பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தாளிசாதி சூரணம் செய்முறை
தேவையான மூலிகைகள் | அளவு |
---|---|
தாளிசபத்திரி | 2 கிராம் |
சன்ன லவங்கப்பட்டை | 2 கிராம் |
ஏலம் | 2 கிராம் |
சுக்கு | 2 கிராம் |
அதிமதுரம் | 2 கிராம் |
பெருங்காயம் | 2 கிராம் |
நெல்லி வத்தல் | 2 கிராம் |
கோஷ்டம் | 2 கிராம் |
திப்பிலி | 2 கிராம் |
சீரகம் | 2 கிராம் |
சதகுப்பை | 2 கிராம் |
கருஞ்சீரகம் | 2 கிராம் |
கற்கடக சிருங்கி | 2 கிராம் |
ஜாதிக்காய் | 1/2 கிராம் |
தான்றிக்காய் | 2 கிராம் |
கடுக்காய் | 2 கிராம் |
ஜடா மஞ்சள் | 2 கிராம் |
மிளகு | 2 கிராம் |
சிறுநாகப்பூ | 2 கிராம் |
செண்பகப்பூ | 1/2 கிராம் |
வாய் விடங்கம் | 2 கிராம் |
இலவங்கப்பத்திரி | 1/2 கிராம் |
ஓமம் | 2 கிராம் |
சர்க்கரை | 30 கிராம் |
திப்பிலி கட்டை | 2 கிராம் |
இலவங்கம் | 1/2 கிராம் |
ஜாதிபத்திரி | 1/2 கிராம் |
கொத்தமல்லி | 6 கிராம் |
கூகை நீர் | 12 கிராம் |
மேலே கூறப்பட்ட மூலிகைகளில் சர்க்கரையை தவிர்த்து மிகுதியை இளம் சூட்டில் வறுத்து பின் தனித்தனியே பொடியாக்கி எடுத்து அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
You May Also Like: