தனம் என்றால் என்ன

Thanam Meaning In Tamil

தனம் என்றால் என்ன

தனம் என்பது செல்வம் ஆகும். செல்வம் எனும் போது தனியே பணம் மட்டுமல்ல தங்கம் கூட வரலாம்.

தனம் வேறு சொல்

  • செல்வம்
  • ஐஸ்வரியம்

தனம் எனும் சொல் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்

தனம் என்பது பெயர்ச்சொல்லாக, இடைச்சொல்லாகவும் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் தனம் பெயர்ச்சொல்லாக வரும் போது “அவரிடம் தனம் இருக்கிறது. ஆனால் தானம் செய்யமாட்டார்” என்பர். இதன்போது தனம் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

தனம் எனும் சொல் தன்மையைக் குறிப்பதற்காகப் பெயருடனும் பெயரடையுடனும் இணைக்கப்பட்டு மற்றொரு சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்லாகவும் பயன்படுகிறது.

அதாவது குழந்தைத்தனம், முட்டள்தனம், சண்டித்தனம், ஊதாரித்தனம், மூடத்தனம், கோமாளித்தனம், மட்டித்தனம், அசட்டுத்தனம், பைத்தியக்காரத்தனம் போன்றனவாகும். இவை அனைத்தும் மனிதர்களின் குணவியல்புகளை எடுத்துக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது.

மெய் உயிர் இயைவு

த் + அ = த
ன் + அ = ன
ம் = ம்

தனம் எனும் பெயர்ச்சொல் ஏற்கும் வேற்றுமை உருபுகள்

தனம் + ஐ = தனத்தை
தனம் + ஆல் = தனத்தால்
தனம் + ஓடு = தனத்தோடு
தனம் + உடன் = தனத்துடன்
தனம் + கு = தனத்துக்கு
தனம் + இல் = தனத்தில்
தனம் + இருந்து = தனத்திலிருந்து
தனம் + அது = தனத்தது
தனம் + உடைய = தனத்துடைய
தனம் + இடம் = தனத்திடம்
தனம் + (இடம் + இருந்து) தனத்திடமிருந்து

You May Also Like:
ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்
கட்டுரை எழுதுவது எப்படி