வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி

Valaikai Bajji Seivathu Eppadi

இந்த பதிவில் வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாழைக்காய் பஜ்ஜி ரோட்டுக் கடையோரம் கிடைக்கும் சுவையான திண்பண்டம். பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணக் கூடிய உணவாகும்.

பண்டிகை நாட்களிலும் விசேட தினங்களிலும் விருந்தினர் வருகையின் போதும் இதனை செய்து அசத்தலாம்.

ரோட்டுக் கடையோரம் செய்யப்படும் சுவையான பஜ்ஜியை வீட்டிலேயே எப்படி சுவையாகச் செய்து அனைவரையும் மகிழ்விக்கலாம் என்று இப்போது பார்க்கலாம் வாங்க!

வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

வாழைக்காய்1
கடலை மாவு1 கப்
அரிசி மாவு1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் சில்லி பவுடர்1 டேபிள் ஸ்பூன்
உப்புதேவையான அளவு
பேக்கிங் சோடாசிறிதளவு
பெருங்காயம்1/4 ஸ்பூன்
இஞ்சிப்பூண்டு விழுது1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
நெய்1 ஸ்பூன்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவுடன் பேக்கிங் சோடா, பெருங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் வாழைக்காயை எடுத்து அதன் தோலை மெல்லியதாகச் சீவி எடுத்து வெட்டி கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் பஜ்ஜியை பொரித்து எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

சூடாக்கிய எண்ணையில் இருந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் எடுத்து பஜ்ஜி மாவில் சேர்த்து கலந்து விடவும். அப்போதுதான் பஜ்ஜி நல்ல கிரிஸ்பியாகவும் அதே நேரத்தில் எண்ணெய் அதிகமாகவும் குடிக்காது.

அடுத்து நறுக்கி வைத்த வாழைக்காயை பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின் அதைக் கொதித்த எண்ணெயில் போட்டு கொள்ளவும்.

அடுப்பை மீடியம் தீயில் வைத்து பஜ்ஜியை பொரித்து ஒரு தட்டில் எடுத்துப் பரிமாறவும்.

அவ்வளவுதான் சுவையான பஜ்ஜி ரெடி!!!

You May Also Like:

வெண் பொங்கல் செய்வது எப்படி

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி