டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை

Dr Radhakrishnan Tamil Katturai

இந்த பதிவில் “டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஆசிரிய தொழிலை வெறும் தொழிலாக பார்க்காத ஒரு பெரிய சேவையாக கொண்டு இவர் பணியாற்றினார். இவரை போன்ற மனிதர்கள் இந்தியாவுக்கு கிடைத்த வரமாகும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. இவரது சாதனைகள்
  4. கல்வி பற்றிய கருத்துக்கள்
  5. சமயங்கள் குறித்த பார்வை
  6. எழுதியவை
  7. முடிவுரை

முன்னுரை

இந்தியாவில் கல்வியாளர் என்ற பெயரை உச்சரிக்கும் போது அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது இவரது பெயராக தான் இருக்கும்.

மாணவர்களது வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியராக துவங்கி இந்தியாவின் முதலாவது குடியரசு தலைவர் எனும் அளவுக்கு உயர்ந்தவர்தான் டாக்டர் ராதகிருஸ்ணன் அவர்கள்.

மிகச்சிறந்த வாசிப்பு திறனும் பேச்சாற்றலும் உடைய இவர் உலகளவில் பிரபல்யமான தலைவர் ஆவார். மிகச்சிறந்த தத்துவ பேராசிரியராக அறியப்படும் இவரது வாழ்க்கை கல்வியின் அவசியத்தை நம் அனைவருக்கும் உணர்த்தி சென்றிருக்கிறது.

இக்கட்டுரை இவரது வாழ்க்கை மற்றும் இவரது பணிகள் தொடர்பாக நோக்குகிறது.

பிறப்பு

இவர் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அம் திகதி திருத்தணியில் சர்வபள்ளி எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் தந்தையர் வீராசாமி மற்றும் சீதம்மா என்பவர்களாவார். இவர் தனது இளமைக்காலத்தை திருப்பதியிலும் திருத்தணியிலும் கழித்தார்.

இவர் “திருப்பதி லத்தரன் மிசன் கல்லூரியில்” பள்ளிப் படிப்பையும் “சென்னை கிறிஸ்தவ கல்லூரியில்” கல்லூரி படிப்பையும் முடித்தார். இவர் தத்துவ பாடத்தில் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். அதில் முதுகலை பட்டமும் பயின்றார்.

இவரது இந்த கல்வி பயணம் பின்நாளில் மிக உயர்ந்த நிலைக்கு இவரை அழைத்து சென்றது.

இவரது சாதனைகள்

இவர் மிகச்சிறந்த அர்ப்பணிப்புடன் ஆசிரிய பணியில் ஈடுபட்டுவந்தார். 1918 இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக கடமை புரிந்தார். அதன் பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் சிறிதுகாலம் தத்துவ பேராசிரியராக கடமையாற்றியிருந்தார்.

இவரது கல்வி சேவையால் பல அற்புதமான மாணவர்களை உருவாக்கினார். 1921 இல் சென்னை பரிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். அதன் பின்பு 1931 இல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உயர்ந்தார்.

அதனை தொடர்ந்து பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக கடமையாற்றினார். இவரது கல்வி சேவைகளை பாராட்டும் விதமாக 1946 இல் “யுனெஸ்கோ” விற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு பல வகையான உயர்ந்த பதவிகளை வகித்ததுடன். இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகவும் பணியாற்றினார்.

கல்வி பற்றிய கருத்துக்கள்

இவர் மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவது தான் உண்மையான கல்வி என்று கூறியவராவார். கல்வியானது இயற்கையோடு இணைந்திருக்க வேண்டும் எனவும் இவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மனநோய்கள், தவறான நடத்தைகள் இவை போன்ற அனைத்தும் தவறான முறையான கல்வியின் விளைவுகள் தான் என இவர் விமர்சித்திருந்தார்.

மேலும் கல்வி ஒன்று தான் மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது என்று கல்வியை பெருமைப்படுத்தி இருந்தார்.

சமயங்கள் குறித்த பார்வை

இவருக்கு மிகவும் பிடித்த நூல் “பகவத்கீதை” என்படும் உலகப்புகழ் பெற்ற தத்துவ நூலாகும். இவர் இது பற்றி கூறுகையில் பகவத்கீதை என்பது உபநிடதங்கள் எனும் பசுவில் இருந்து கிருஸ்ணர் எனும் தெய்வீக ஆயர் அர்ச்சுனனுக்காக கறந்த பால் என்று விளக்கமளித்தார்.

சாதியம் எனும் உணர்வு கூடாதது மற்றும் தீண்டாமை எனும் அடக்குமுறை இந்து சமயத்திற்கு தேவை இல்லாதது என உறுதிபட கூறினார். பிற மதங்களையும் சமய கொள்கைளையும் மதித்த ஒரு ஒப்பற்ற பெரும் தலைவராக இவர் விளங்கினார்.

எழுதியவை

இவர் தனது கல்வி புலமையினால் பல நூல்களை எழுதியிருந்தார் அவையாவன “இந்திய தத்துவம்” எனும் நூலை 1923 இல் வெளியிட்டார். மற்றும் மகாத்மா காந்தி, பகவத்கீதை விளக்க உரை, முதன்மை உபநிடதங்கள், இந்திய சமயங்களின் சிந்தனைகள், இரவீந்திரநாத்தின் தத்துவம் போன்ற நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

இவரது நூல்களில் தெளிவான தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தரமான சொற்கள், அழகான மொழிநடை போன்றவற்றை காணமுடியும்.

முடிவுரை

ஆசிரிய தொழிலை வெறும் தொழிலாக பார்க்காத ஒரு பெரிய சேவையாக கொண்டு இவர் பணியாற்றினார். இவரை போன்ற மனிதர்கள் இந்தியாவுக்கு கிடைத்த வரமாகும்.

இவர் “ஒரு ஆசிரியர் போர் வீரனை போன்றவர் வெற்றி தோல்விகளை பற்றி கவலை படாமல் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இவர் போன்ற தலைவர்கள் எமது நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும்.

You May Also Like :

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை

வ.உ.சிதம்பரனார் கட்டுரை