பெரியம்மை நோய் வேறு சொல்

பெரியம்மை நோய் வேறு பெயர்கள்

பல நூற்றாண்டுகளாக மனிதர் குலத்தை ஆட்டிப் படைத்த நோய்களில் ஒன்றே பெரியம்மை நோயாகும்.

பெரியம்மை நோய் என்பது கடும் காய்ச்சல், வடு உண்டாக்கக் கூடிய, பெரிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு வகையான நோய் ஆகும்.

பெரியம்மை நோய் வேறு சொல்

  • வைசூரி

பெரியம்மை நோய்க்கான அறிகுறிகள்

நோயரும்பல் காலத்தில் இந்நோயின் அறிகுறிகள் தென்படாது நோய் உடல் முழுவதும் பரவும் ஆனால் ஏனையோருக்கு பரவாது.

நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக நோயினால் பாதிக்கப்பட்ட நபர் எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு சோர்வுற்று காணப்படும் அதேவேளை அதிகபடியான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல் என்பன ஏற்படும். சில சமயங்களில் பரவும் தன்மை கொண்டது.

வாயிலோ நாக்கினிலோ முதலில் வேனிற் கட்டிகள் ஏற்படும். பின் 24 மணி நேரத்தில் உடல் முழுவதும் பரவும் தன்மை கொண்டது. இவ்வறிகுறி ஏற்படும் போது காய்ச்சல் அதிகமாக காணப்படும். தெளிவற்ற நீரைக் கொண்ட கொப்புளங்கள் உடல் முழுவதும் காணப்படும். அதிகம் பரவும் தன்மை கொண்டது.

அடுத்த கட்டமாக உடம்பில் கொப்புளங்களால் ஏற்பட்ட புண்களில் மீண்டும் பெரிய பெரிய கொப்புழங்கள் ஏற்படும் போது அதனுள் பொட்டுக்கடலை இருப்பது போல் உடல் முழுவதும் தென்படும். அது கிட்டதட்ட வட்ட வடிவில் காணப்படும்.

அடுத்த கட்டத்தில் காய்ந்த பொருத்தும் கீழை விழும் தன்மை கொண்டது. அப்போது அந்நோயானது பரவும் தன்மை அதிகமாக காணப்படும்.

இறுதியில் பொறுக்குகள் நீங்கி தளும்புகள் மட்டும் காணப்படும்.

நோய் தடுப்புக்கான மருந்துகள்

இந்நோய் தடுப்பதற்கான மருந்துகள் பெரிதாக இல்லை. அந்நோயை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளுக்கு எதிராக சில மருந்துகள் வழங்கப்படலாம். ஆனால் அவை பெரிதாக பயனளிப்பதில்லை. நோய் பரவாமல் இருப்பதற்காக மருந்துகள் வழங்கப்படும்.

நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு

இந்நோயை தடுப்பதற்காக மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்ற நிலையிலேயே உலகம் முழுவதும் பரவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதன் பின்பு WHO வின் முயற்சியில் இந்நோய் முற்றும் முழுதாக நீக்கப்பட்டது.

Read more: உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

நோய் வரக் காரணங்கள்