மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவி மண்டலம் ஆகும். இந்த புவி மண்டலம் இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகள் உள்ளன. அவையாவன,
- நிலம்
- நீர்
- காற்று
- ஆகாயம்
- நெருப்பு
இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுதான் இயங்க முடியும். இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகமே அதிக பாதிப்பை சந்திக்கும்.
Table of Contents
சுற்றுப்புறம் என்றால் என்ன
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது சுற்றுப்புறம் ஆகும்.
சுற்றுப்புறத் தூய்மை
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால் மனிதகுலம் பல வழிகளில் பயனடையும். இன்றைய சூழலில் சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு பலவழிகளில் உருவாக்கப்படுகின்றது. அதற்கு காரணம் மனித இனத்திற்கு அதன் மூலம் வரும் பயன்களே ஆகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான பிரச்சினையாகும். எனவே தான் கூட்டு முயற்சி, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியன உருவாக்கப்படுகின்றன.
அதனால் மாசுகளிலிருந்து உலகம் காக்கப்படுவதுடன் உலகக் குடிமகன் என்ற பிரிநிலை கண்ணோட்டம் ஏற்படவும் துணை நிற்கின்றது. அத்துடன் மனித குலம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
“சுத்தம் சுகம் தரும்” என்பது முதுமொழி. நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நமக்கு நன்மை பயக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். கண்ட இடங்களில் குப்பை போடுவது மேலும் எளிதில் மக்கிப் போகாத பிளாஸ்டிக் பொருட்களை நிலத்தில் கொட்டி அதன் வளத்தை கெடுக்காது இருக்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் குளம், ஆறுகள், ஏரி போன்ற நீர் நிலைகளை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியமானதாகும். கழிவு நீரை நீர் நிலைகளில் கலக்காதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் சுவாசிக்கும் வளி மண்டலத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். நீர், நிலம், காற்று மட்டுமன்றி நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் தூய்மையாக வைத்திருப்பதே முழுமையான தூய்மையாகும்.
சமூகத்தின் ஆரோக்கியம் அதன் சுற்றுப்புற தூய்மை பொறுத்தே அமைகின்றது. அதுவே நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் செய்யும் அரிய உதவியாகும்.
சுற்றுச்சூழல் கல்வி
மனிதன் இயற்கையோடும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள தொடர்பையும், மக்கள்தொகை, சுற்றுச்சூழல் சீர்கேடு, வளங்களை பாதுகாத்தல், தொழில்நுட்பம் போன்றவற்றோடு மனிதன் கொள்ளும் முழுமையான தொடர்பைக் கற்பதே சுற்றுச்சூழல் கல்வி எனப்படும்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுதல், அதன் மூலம் இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாப்பதுடன் அவற்றைச் சரியான வகையில் உபயோகித்தல், அதன் முக்கியத்துவத்தை உணர்தல்
ஆகியவையே சுற்றுச்சூழல் கல்வியின் முக்கிய குறிக்கோளாகக் காணப்படுகின்றது.
சுற்றுச்சூழல் கல்வியின் மூலம் இளைய சமுதாயத்தினரிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
Read more: சுற்றுச்சூழல் என்றால் என்ன