உலகில் உள்ள ஒரு பொருளை எடுத்தால் அதற்கென உரித்துடைய ஒரு பெயர் வைக்கப்பட்டும் இருக்கும். அத்தோடு பேச்சு வழக்கின்படியோ தமிழ் இலக்கண வழக்கின்படியோ அப்பெயருக்கு வேறு பெயர்களும் கூறப்படுகின்றன. அவ்வகையில் சக்கரம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் பற்றி ஆராய்வோம்.
Table of Contents
சக்கரம் வேறு பெயர்கள்
- சுழலி
- ஆழி
- சில்லு
- உருளை
- உந்தி
- உருளி
- சில்
- வட்டம்
- பரிதி
சக்கரம் என்ற சொல்லின் பொருள்
அதிக எடையுள்ள பொருட்களை இலகுவாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்ல ஓர் அச்சில் சுழலும் அமைப்பே சக்கரம் எனப்படும். சரித்திரம் மாற்றிய கண்டுபிடிப்பாக இது காணப்படுகின்றது. சுருங்கக் கூறின் வட்ட வடிவில் சுலபமாக உருவாகக் கூடிய ஒரு பொருள் சக்கரம் எனப்படும்.
சக்கரம் என்ற சொல்லின் தோற்றம்
சரக்கு என்பதிலிருந்து சக்கரம் என்ற சொல் பிறந்து இருக்கும் என்பது மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணரின் கருத்து.
தமிழில் லெக்சிகன் அகராதிப்படி சக்கரம் “ஆழி”, “சில்லு” என்றும் கூறப்படுகின்றது.
சக்கரம் என்ற சொல்லின் பயன்பாடு
சக்கரம் என்ற சொல்லானது அது பயன்படும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை தருகின்றது.
வாகனங்களில் பயன்படும் போது அது வாகனச் சக்கரம் என்றும், விஷ்ணுவின் கையில் இருக்கும் போது அது தர்மசக்கரம் என்றும், விளையாட பயன்படும் போது அச்சக்கரம் ராட்டினம் எனப்படுகின்றது.
பாணை வணைதலின் போது அச்சக்கரம் குயவனின் சக்கரம் ஆகின்றது. காலத்தை அளவிடும் போது அது காலச்சக்கரம் எனவும், புத்தகத்தில் வரையும் போது அது வட்ட வடிவு எனவும் பழங்காலத்தில் சக்கரம் நாணயத்தில் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்பட்டமையினால் அது நாணய சக்கரமும் ஆகின்றது.
மேஞ்சிறை வட்டார வழக்குப்படி வட்டமாக செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் எனப்பட்டது. இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் சக்கரம் என்ற சொல் பல கோணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
சக்கரத்தின் பயன்பாடுகள்
பானை வணைதல் தொடங்கி இயந்திரத் தொழிற்சாலை வரை சக்கரம் இல்லாத இடமே இல்லை.
சீரான நீரோட்டம் உள்ள ஆறுகளில் நீரை மொண்டு ஊற்ற அகப்பை போன்றவற்றை இணைத்து பயன்படுத்துகின்றனர். இந்த நீர் சக்கரத்தால் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.
மற்றும் மாட்டு வண்டி முதல் வானில் செல்லும் விமானம் வரை சக்கரத்தின் பயன்பாடு காணப்படுகின்றது.
You May Also Like : |
---|
செயல் வேறு சொல் |
துவாரம் வேறு சொல் |