குழந்தைகள் உரிமைகள் கட்டுரை

kulanthaigal urimaigal katturai in tamil

உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகளே. இவர்கள் தமக்குள் எந்தவித பால், இன, மத, நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் உரிமையை கொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் எப்பொழுதும் குழந்தைகளின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அனுபவிக்க வழிவிட வேண்டும்.

குழந்தைகள் உரிமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தைகள் என்போர்
  • குழந்தைகளின் சட்டபூர்வமான உரிமைகள்
  • குழந்தை உரிமை மீறல்கள்
  • பாதுகாக்கும் நடைமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

குழந்தைகள் என்பவர்கள் நமது இந்த சமுதாயத்தினுடைய பெறுமதி வாய்ந்த விலைமதிப்பற்ற சொத்துக்களாகும். ஆனால் இன்றைய சமூகத்தில் பல உரிமை மீறல்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகின்றன.

குழந்தைகள் தான் நாளை நாட்டின் தலைவர்களாக மாறுகிறார்கள். குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தான் “எதிர்கால இந்தியாவை சிறுவர்களே வளமாக்குவார்கள்” என்று டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கூறினார்.

எனவே நாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் என்போர்

சர்வதேசச் சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு மனிதனும் குழந்தை என்று அழைக்கப்படுவார்கள். இது உலகளாவிய ரீதியில் 1924 ஆம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டு ஒரு தினமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பருவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் பெற்றோர்களாலும் பாதுகாவலர்களாலும் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களுக்கு உரிய முறையான கல்வியானது வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் சட்டபூர்வமான உரிமைகள்

உயிர் வாழ்வதற்கும் அபிவிருத்திற்கமான உரிமை, பிறப்பால் பெயரையும் இனத்தையும் பெற்றுக்கொள்வதற்கான உரிமை, பெற்றோரைப்பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்களின் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்குமான உரிமை,

பெற்றோரிடம் இருந்து பிரிக்க முடியாமைக்கான உரிமை, சிந்திப்பதற்கும் மனசாட்சிக்குமான உரிமை, தனித்துவத்திற்கான உரிமை, போதிய கல்விக்கான உரிமை, ஆரோக்கியத்திற்கான உரிமை, ஓய்வுக்கும் விளையாட்டுக்குமான உரிமை,

பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்தும் ஆபத்தான செயற்பாடுகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்குமான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை, கொடூர அல்லது சித்திரவதை தண்டனைகளில் இருந்து விடுபடுவதற்கான உரிமை என்பனவாகும்.

குழந்தை உரிமை மீறல்கள்

குழந்தைகளுக்கான உரிமைகள் பல உள்ளன. அந்த உரிமைகளை சட்ட ரீதியாக அமுல்படுத்தியும் கூட அவற்றை எல்லாம் மதிக்காமல் அவற்றினை மீறி குழந்தைகளை தண்டித்தல், துன்புறுத்துதல், வேலைக்கு அமர்த்தல் போன்ற காரியங்கள் குழந்தைகள் உரிமை மீறல்களாக கருதப்பட்டு சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதுகாக்கும் நடைமுறைகள்

குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளால் குழந்தைகளை சரியாக கவனிக்காத பொற்றோர்கள் அவர்களது கல்வி மற்றும் எதிர்கால கனவுகளை பாழாக்கி விடுகிறார்கள்.

போதைப்பொருட்கள் மற்றும் குற்ற செயல்கள் நிறைந்த ஒரு சமூகத்தினால் குழந்தைகளை கீழ்த்தரமான வேலைக்கு அமர்த்துவதால் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது.

இவற்றை தடுக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பதோடு சட்டம் மிகவும் பலமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் பல விதமாக அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். இதனால் எமது நாட்டின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.

இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தமது குழந்தைகளை ஒழுக்கம் நிறைந்த நல்ல பிரஜைகளாக வளர்க்கவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் பாரிய அளவில் சமூக பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.

Read more: பாலின சமத்துவம் கட்டுரை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை