இந்த பதிவில் “காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை” பதிவை காணலாம்.
காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்தாமல் விடுவது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிடும்.
Table of Contents
காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காற்று மாசு எனப்படுவது
- காற்று மாசடையும் வழிகள்
- காற்றை மாசுபடுத்தும் கூறுகள்
- காற்று மாசுபாட்டின் விளைவுகள்
- காற்று மாசடைவை தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
வளிமண்டலம் இன்று அதிகளவில் மாசடைந்து வருகின்றது. வளி மாசடைவானது மனிதனை நேரடியாக பாதிக்கின்றது. அதிகளவான மக்கள் வாழக்கூடிய நகரப்பகுதிகளில் இந்த காற்று மாசடைதல் அதிகமாக இடம் பெறுகின்றது.
இந்தியாவில் முக்கியமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற இடர்களில் காற்று மாசடைவு மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. மனிதன் வாழ அவசியமானது காற்று இதன் மாசடைவு மனித வாழ்க்கையினையே கேள்விக்குறி ஆக்கிவிடும் நிலையானது இன்று காணப்படுகிறது.
இக்கட்டுரையில் வளிமாசடைதல் எவ்வாறு உருவாகின்றது அதனுடைய பாதிப்புக்கள் அதனை தடுக்கும் வழிமுறைகள் என்பன தொடர்பாக நோக்குவோம்.
காற்று மாசு எனப்படுவது
காற்று எனப்படுவது பல வாயுக்கள் நிறைந்த கலவையாகும். அதாவது காற்றில் நைதரசன், ஒட்சிசன், காபனீரொட்சைட் போன்ற பிரதான வாயுக்கள் காணப்படுகின்றன. இந்த வாயுக்களின் சதவீதம் மாறாதவகையில் வளிமண்டலம் பேணுகின்றது.
இந்த இயற்கையான சமநிலையை குழப்பும் வகையில் மனித நடவடிக்கைகளால் வெளிவிடப்படும் வாயுக்கள், திடமான துகள்கள், தூசுக்கள் போன்றன வளிமண்டலத்தில் அதிகளவில் சேர்வதால் காற்றினுடைய பௌதீக தன்மை மாறுபடுவதனை காற்று மாசடைவு என அழைக்கப்படுகிறது.
காற்று மாசடையும் வழிகள்
காற்றினை மாசுபடுத்தும் வேலையினை மனிதர்களே மேற்கொள்கின்றனர். அனல் மின்சார நிலையங்கள், அணு உலைகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் சாம்பல்கள் அதிகளவில் வளிமண்டலத்தில் சேர்வதற்கு காரணமாக இருக்கின்றது.
மற்றும் அதிகளவான வாகனங்களின் பாவனை இடம் பெறுவதனால் பெற்றோலியம் அதிகளவில் தகனமடைந்து வளிமண்டலத்தில் காபன்வாயுக்கள் சேர்கின்றன.
அத்துடன் அதிகளவான காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக காடுகள் உறிஞ்சுகின்ற காபன் வாயுக்களின் அளவு குறைவதனாலும் காற்று மாசடைவு அதிகமாகின்றது.
காற்றை மாசுபடுத்தும் கூறுகள்
காற்றினை மாசுபடுத்தும் கூறுகளாவன வாகனங்களில் இருந்து வெளியேறும் காபனீரொட்சைட் வாயு, அனல்மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியால் உருவாகும் சல்பர் கந்தகவீரொட்சைட் போன்ற வாயுக்கள்
மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் குளோரோ புளோரோ காபன் வாயுக்கள் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் தகனமடைவதனால் வெளியேறும் நியோன் வாயு சுரங்கங்கள்
மற்றும் கல் உடைக்கும் தொழிற்சாலைகள் சீமெந்து தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்தும் தூசு துகள்கள் அதிகம் வெளிவிடப்படுகின்றன. இவ்வகையான கூறுகள் காற்றினை அதிகளவில் மாசுபடுத்துகின்றன.
காற்று மாசுபாட்டின் விளைவுகள்
காற்று மாசுபடுவதனால் அதிகளவான பிரச்சனைகள் இன்று உணரப்படுகின்றன. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தோல் தொடர்பான நோய்கள், சுவாசப்பை அழற்சி, சுவாசப்புற்று நோய், ஆஸ்த்துமா போன்ற நோய்கள் உருவாகின்றன.
அதிகம் நகர பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் இந்த காற்றுமாசடைதல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகில் அதிகம் காற்று மாசடைதல் இடம்பெறும் நகரமாக உள்ளது.
காற்று மாசடைவை தடுக்கும் வழிகள்
காற்று மாசடைதலை கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானதாகும். காபனீரொட்சைட் போன்ற கெடுதலான வாயுக்களை மரங்கள் அகத்துறிஞ்சுவதனால் நாம் அதிகம் மரங்களை வளர்ப்பது காற்று மாசடைவை குறைக்கும்.
வளிமண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்களை அதிகம் வெளிவிடும் தொழிற்சாலைகளில் காற்று மாசடைதலை தடுக்க முறையான தொழிநுட்பங்கள் பேணப்பட வேண்டும்.
காற்றை சுத்திகரிக்கும் நிலையங்களை உருவாக்குதல் எரிபொருள் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக சூரியமின் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாறுதல். இவ்வாறான வழிமுறைகள் மூலமாக வளிமாசடைதலை கட்டுப்படுத்த முடியும்.
முடிவுரை
இன்று காற்றின் தரம் மிகவும் மேசாமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் விடுவது மனிதர்களுக்கு மிகவும் சவாலானதாக மாறிவிடும்.
கொரோனாவுக்கு அஞ்சி முககவசம் அணிவது போல காற்றுமாசடைவால் நாம் முக கவசம் அணிகின்ற நிலை உலகின் மாசுபட்ட நகரங்களில் ஏற்பட ஆரம்பித்து விட்டது.
இந்த நிலை எமது நாடுகளில் ஏற்படாமல் இருக்க காற்றினை மாசுபடுத்துவதை நாம் நிறுத்தி கொள்ள வேண்டும். சூழலை மாசடைய செய்வதன் விளைவு இன்று அனைவரும் நன்றாக அறிவர். ஆகவே காற்று மாசடைவை தடுக்க எம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோம்.
You May Also Like :