மலங்கள் மூன்று ஆகும். அதாவது ஆன்மாவிற்கு உண்டான மும்மலங்கள் உள்ளன. அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். கன்மம் என்பது, நீ செய்யும் செயல்கள் உன்னிடமே வந்து சேரும் என்பதாகும்.
ஆணவம் மட்டும் பிடித்த ஆன்மாக்களை “விஞ்ஞானகலர்” என கூறுகின்றனர். ஆணவம் மற்றும் கன்மம் ஆகிய இரண்டையும் பிடித்த ஆன்மாக்களுக்கு “பிரளயாகலர்” என அழைப்பர்.
ஆணவம், கன்மம், மாயை மூன்றும் மலங்களும் பிடித்திருந்தால் அந்த ஆன்மாக்களுக்கு “சகலர்” என்பது பெயராகும்.
Table of Contents
கன்மம் என்றால் என்ன
கன்மம் என்றால் கர்மா எனப் பொருள்படும். மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் கன்மம் என அழைக்கப்படுகின்றது.
ஒரு பிறவியில் ஒரு மனிதன் செய்யக்கூடிய நல்வினை, தீவினை இரண்டு செயல்களுமே கன்மம் எனப் பொருள்படுகின்றது. இதற்கு வேறு பெயர்களாக வினை, கருமம், செயல் என்பன விளங்குகின்றன.
“நெல்லில் முளை போன்றது கன்மம்” என சிவஞான சித்தியார் என்கின்ற நூலில் உதாரணமாக கூறப்பட்டுள்ளது. கன்ம மலமானது மொத்தம் மூன்று வகைப்படும்.
- சஞ்சித கன்மம்
- பிராரப்த கன்மம்
- ஆகாமிய கன்மம்
சஞ்சித கன்மம் – முன் ஜென்மத்தில் செய்த வினைகளைக் குறிப்பதாகும்.
பிராரப்தம் – இப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவ, புண்ணிய வினைகள் ஆகும்.
ஆகாமிய கன்மம் – மறுபிறவியில் அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய பிறவியில் செய்யக்கூடிய பாவ, புண்ணிய வினைகளாகும்.
கன்மமலம் பிடித்த ஆன்மாக்களுக்கு உண்டான குணங்கள்
படி (சோம்பல் என்பது பொருள்) கன்மமலம் பிடித்த ஆன்மாக்கள் சோம்பலை வெளிப்படுத்தும்.
பெசிப்பின்மை அதாவது எந்த ஒரு நுகர்ச்சியும் இல்லாமல் ஜடம் போல் கிடக்கும் செயலாகும். பாவ புண்ணியம், இகழ்ச்சி போன்ற குணங்களை வெளிப்படுத்தும்
மாயை
ஆணவம், கன்மம், மாயை மூன்றும் சேர்ந்த மும்மலங்கள் ஆன்மாவை ஆட்டி வைக்கின்றன.
ஆனால் ஆணவம் மற்றும் கன்மம் ஆகிய இரண்டையும் மாயை உருவாக்குகின்றது. உலக உயிர்களை மயக்க செய்வது மாயை ஆகும். இதனாலேயே இதற்கு மாயை எனப் பொருள் வந்தது.
உலக உயிர்களை இது ஒடுங்கச் செய்கின்றது. இதனால் இதனை ஒடுக்கம் என்பர். “நெல்லில் தவிடு போன்றது மாயை” என சிவஞான சித்தியார் என்னும் நூலில் உதாரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த மாயையானது சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு வகைப்படும்.
மாயை மலம் பிடித்த ஆன்மாக்கள் வெளிப்படுத்தும் குணங்கள்
- களவு
- மறுத்தல்
- ஈயாதல்
ஆணவம்
ஒரு ஆன்மாவினது அறிவை மறைக்கக்கூடிய சக்தி ஆணவத்துக்கு உண்டு. எனவே உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவம் ஆகும். இந்த ஆன்மாவானது அறிவற்ற நிலையில் இயங்கும்.
இதற்கு அஞ்ஞானம், சிறுமை, அசுத்தம் என வேறு பெயர்கள் உண்டு. ஆணவம் என்னும் மலத்திற்கு “நெல்லில் உமி போன்றது ஆணவமலம்” என சிவஞான சித்தியார் நூலில் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றது.
அதாவது நெல் என்பது ஆன்மா அதில் வரும் உமி ஆணவமலமாகும். நெல்லை தெரியாத வண்ணம் உமி போர்த்தியிருப்பது போல ஆன்மாவை முழுவதும் மறைக்கக் கூடிய அறியாச் சக்தி ஆணவம் ஆகும்.
ஆணவமலம் பிடித்த ஆன்மா வெளிப்படுத்தும் குணங்கள்
- மோகம்
- கோபம்
- அறியாமை
- கொலை
- வருத்தம்
- நான் எனும் அகங்காரம்
Read more: கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்