“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” என்பது பழமொழி. இதன் பொருள் கடுகு போல எந்தவொரு சிறிய பொருளோ அல்லது உயிரோ தனக்குள் மிகப்பெரிய விஷயங்களை ஒளித்து வைத்திருக்கும் என்பது ஆகும்.
அப்படி ஒரு சிறிய உயிரினம் தனக்குள் ஆட்கொள்ளித் திறனை வைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் பெரிதும் வலம் வந்து பலரைக் கொன்று உள்ளது. அதுவே உருவத்தில் சிறிதாக உள்ள கதண்டு வண்டு ஆகும்.
கதண்டு வண்டானது பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் தான் வாழும். கதண்டு வண்டு தேனை சேகரிக்கும். பார்ப்பதற்கு தேனீ போன்று இருக்கும்.
எனினும் தேனீயை விடப் பெரிதாகும். மிக உயரமான மனிதர்கள் வர முடியாத இடங்களில் பார்த்துத்தான் கூட்டைக் கட்டும். கூட்டமாக வாழ்ந்தாலும் கதண்டு வண்டுகள் தனிமை விரும்பிகள் ஆகும்.
பொதுவாக தேனீக்கள் அல்லது குளவிகள் கொட்டினால் அதன் கொடுக்கு நம் உடலில் மாட்டி உடைந்துவிடும். குறிப்பாக தேனீக்கள் கொட்டிவிட்டு அதுவும் இறந்துவிடும். காரணம் அதன் கொடுக்கு உடைவதால் ஆகும். ஆனால் கதண்டு வண்டு கொடுக்குகள் உடையாது. ஒரே வண்டு பலமுறை ஒருவரைக் ஒட்டிய நிகழ்வுகளும் உண்டு.
கதண்டு வண்டு ஒருவரை கொட்டினால் பார்மிக் அமிலம் அதன் கொடுக்கு மூலம் நம் உடலில் சென்று நரம்பு மண்டலத்தினைப் பாதிக்கும். அதிக எண்ணிக்கையில் கதண்டு வண்டு கடித்தால் உயிர் போகும் வாய்ப்பும் உள்ளது.
அதாவது கதண்டு வண்டு கை கால் போன்ற இடங்களில் கடித்தால் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. ஆனால் ஒருவரை தலையில் கதண்டு வண்டு தாக்கினால் மூளை மற்றும் கிட்னி செயலிழக்க வாய்ப்புகள் உண்டு.
இந்த கதண்டு வண்டுகள் அதன் கூட்டில் சில ரசாயனங்களை வைத்திருக்கும். அதே ரசாயனத்தை ஒருவரை கொட்டும்போது செலுத்தும். அதைப் பின்தொடர்ந்து வந்து தாக்கும் குணம் உடையது இந்த கதண்டு வண்டு.
Table of Contents
கதண்டு என்றால் என்ன
கதண்டு வண்டு என அழைக்கப்பட்டாலும் இது வண்டு இனத்தை சார்ந்ததல்ல குளவிகள் இனத்தை சார்ந்த பூச்சி வகையாகும்.
வரலாற்று நிகழ்வு
சதுரகிரி மலைப்பகுதியில் வாழ்ந்த பளியர் இன மக்கள் கதண்டு வண்டு தேனை எடுப்பதை மரபுசார்ந்த போட்டியாக வைத்திருந்தனர். அவர்களது உணவே தேனும், மலைக் கிழங்குகளும் தான்.
இன்று பேச்சுக்கேணி என அழைக்கப்படும் இடத்தில் மிகப்பெரிய மரங்களுக்கும், மனிதர்கள் நுழைய முடியாத பாறைகளுக்கும் நடுவே இருந்த கதண்டுத் தேன் எடுப்பதில் மிகப்பெரிய போட்டி நிகழ்ந்தது.
அப்போது பேச்சி என்னும் பளியர் இன பெண் கயிறு மூலம் இறங்கி கதண்டு வண்டுக் கூட்டை நெருங்கி விட்டாள். அதுவரை அப்படியொரு நிகழ்வை பார்த்திராத பளியர் இன மக்கள் பதட்டத்தின் உச்சியில் இருந்தனர்.
பெண் வெற்றி பெறுவதை ஏற்க மனமில்லாத கோழைகள் பேச்சி கட்டியிருந்த கயிற்றை அறுத்தனர். பேச்சி பாறை இடுக்குகளில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். அதன் பின்னர் பேச்சிக்கு கோவிலும் கட்டப்பட்டது.
இன்று அவ்விடம் பழங்குடி பெண்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் உணர்த்தும் இடமாக இருக்கின்றது.
Read more: ஜீவசமாதி என்றால் என்ன