கச்சா எண்ணெய், திரவ பெட்ரோலியம் பூமியின் மேலோட்டத்தில் உள்ள பல்வேறு நுண்துளை பாறை அமைப்புகளில் குவிந்து எரிபொருளாக எரிப்பதற்காக அல்லது இரசாயனப் பொருட்களை பதப்படுத்துவதற்காக பிரித்தெடுக்கப்படுகிறது.
பொதுவாக, கச்சா எண்ணெயின் கனம், அதன் கந்தகத்தின் உள்ளடக்கம் அதிகமாகும். சுத்திகரிப்பு செய்யும் போது கச்சா எண்ணெயில் இருந்து அதிகப்படியான கந்தகம் அகற்றப்படுகிறது.
ஏனெனில் எண்ணெயை எரிக்கும் போது வளிமண்டலத்தில் வெளியிடப்படும் சல்பர் ஆக்சைடுகள் பெரும் மாசுபடுத்திகள் ஆகும்.
கச்சா எண்ணெய் மூலம் பல்வேறு பயன்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. கச்சா எண்ணெய் மூலம் பெற்றோல், டீசல் மாத்திரமன்றி பல்வேறு பொருட்களும் கிடைக்கின்றன.
குறிப்பாக இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனைத் திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கின்றன.
Table of Contents
கச்சா எண்ணெய் என்றால் என்ன
கச்சா எண்ணெய் என்பது ஒப்பீட்டளவில் ஆவியாகும் திரவ ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். (முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் கார்பனால் ஆன கலவைகள்) இருப்பினும் இதில் சில நைட்ரஜன், சல்பர் மற்றும் ஆக்ஸிஜனும் உள்ளது.
அந்த தனிமங்கள் பல்வேறு சிக்கலான மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. அவற்றில் சிலவற்றை உடனடியாக அடையாளம் காண முடியாது. இருப்பினும், ஏறக்குறைய அனைத்து கச்சா எண்ணெயும் எடையில் 82 முதல் 87 சதவீதம் கார்பன் மற்றும் 12 முதல் 15 சதவீதம் ஹைட்ரஜன் வரை இருக்கும்.
கச்சா எண்ணெய் உருவாக்கும் விதம்
பூமிக்கு அடியில் நிலவும் வெப்ப நிலையே இயற்கை எரிவாயு அல்லது கச்சா எண்ணெய் உருவாக்கத்திற்கு அடிப்படைக் காரணமாகும்.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இறந்து விழுந்த உயிரினங்கள் மற்றும் செடிகள் பல நூற்றாண்டுகளைக் கடந்து வளங்கள் கொண்ட புதை பொருட்களாக மாறுகின்றன.
கடலுக்கடியில் புதையுண்ட உயிரினங்கள் மணல் மேடுகளாக மூடப்பட்டு நாட்பட்ட இரசாயணமாக மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. பின் மணல் மேடுகள் பாறைகளாக மாறுகின்றன.
பூமியின் வெப்பத்தாலும், பாறைகளின் அழுத்தத்தமாலும் புதையுண்ட உயிரினங்கள். இரசாயன மாற்றத்திற்குப் பின் ஒட்டுத்தன்மையுடைய ஒரு கருந்திரவமான கச்சா எண்ணெயாக மாறுகின்றது.
இவ்வாறு கடலுக்கடியில் எடுக்கப்படுகின்ற கச்சா எண்ணெய் பல கட்டச் சுத்திகரிப்பிற்குப் பின்பு நம் அத்தியாவசியத் தேவையான பெற்றோலாக நமக்குக் கிடைக்கின்றது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முதல் கட்டமாக எண்ணெய் ஒரு உலையில் அதிக கொதி நிலையில் கொதிக்க வைக்கப்படுகின்றது. அடுத்ததாக கொதித்த கச்சா எண்ணெய் நீராவியாக பக்கத்திலிருக்கும் வடிகட்டும் சிலிண்டரில் செலுத்தப்படுகின்றது.
இந்த வடிகட்டும் சிலிண்டரில் கீழிருந்து மேல் வரைக்கும் திரவங்களைச் சேகரிப்பதற்கான தட்டுக்கள் உள்ளன. சிலிண்டரின் கீழ்ப்பகுதி சூடாகவும் மேல் பகுதி குளிர்ந்தும் இருக்கும்.
கச்சா எண்ணெய் நீராவியாக சிலிண்டருக்குள் செல்லும் போது குறைந்த கொதிநிலை கொண்ட மூலக் கூறுகள் சிலிண்டரின் மேல்ப் பகுதிக்குள் சென்று விடுகின்றன. மீதமுள்ள அதிக கொதிநிலை கொண்ட மூலக் கூறுகள் கீழேயே படிந்து விடுகின்றன.
அப்படி மேல் பகுதிக்குச் செல்லும் நீராவி சிலிண்டரின் குளிர்ந்த தன்மையால் சுத்திகரிக்கப்பட்ட திரவமாக மாறிவிடுகின்றது.
அப்படித் திரவமாக மாறும் தன்மையில் அதன் கொதிநிலைக்கு ஏற்றால் போல் கேசோலின், பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் எனப் பிரித்தெடுக்கப்படுகின்றது.
Read more: ஆமணக்கு எண்ணெய் பயன்கள்