மானிடர்களிடம் காணப்படும் கலைகளில் ஓவியமும் ஒன்றாகும். ஓவியம் வரைதல் என்பது ஒரு கலை. அக்கலை பெற்றவர்கள் அதிஷட்டம் உடையவர் என்றே கூற முடியும்.
அவ்வகையில் ஓவியம் என்பது ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம் ஓவியம் எனப்படும். மேலும் பொருள் கூறுகையில் ஓவியம் என்பது கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள் என்று கொள்ளலாம்.
மேலும் தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படமும் ஓவியம் எனப்படும்.
மனிதன் குகைகளில் வாழ்ந்த கற்காலத்திலேயே ஓவியம் தீட்டத் தொடங்கி விட்டான். கண்ணால் கண்ட ஒரு காட்சியைத் தனது மனத்தில் பதிய வைத்துக் கொண்டு அதனைப் பிறர் காணும் வகையில் பாறைகளில் எழுதிக் காட்டி ஓவியத்தைக் கலையாக்கினான்.
இவ்வாறு அன்று குகைகளில் வரைய ஆரம்பித்த ஓவியங்கள் இன்று மாபெரும் கலைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறான ஓவியம் என்ற சொல்லுக்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.
ஓவியம் வேறு சொல்
- சித்திரம்
- படம்
Read more: நீரிழிவு நோய் என்றால் என்ன