ஐவகை நிலங்கள் – Ivagai Nilangal In Tamil

ivagai nilangal in tamil

தமிழர்கள் வாழ்வியல் பல சிறப்பம்சங்களை கொண்ட அமைந்ததாகும். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை 5 வகையாகப் பிரித்தனர். அவற்றிற்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயரிட்டு அழைத்து வந்தனர்

இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர்.

இந்த ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனியே தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு ஆகியன உள்ளன. இவ் ஐவகை நிலங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஐவகை நிலங்கள் யாவை

குறிஞ்சிமலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லைகாடும் காடு சார்ந்த நிலமும்
மருதம்வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல்கடலும் கடல் சார்ந்த நிலமும்
பாலைமணலும் மணல் சார்ந்த இடமும்
(வறண்ட மணற் பகுதி)

தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.

ஐவகை நிலங்கள் அட்டவணை

ஐவகை நிலங்கள் தெய்வம்

குறிஞ்சிமுருகன்
முல்லைதிருமால்
மருதம்இந்திரன்
நெய்தல்வருணன்
பாலைகொற்றவை

ஐவகை நிலங்கள் மக்கள்

குறிஞ்சிகுறவன், குறத்தியர்
முல்லைஆயர், ஆய்ச்சியர்
மருதம்உழவர், உழத்தியர்
நெய்தல்பரதர், பரத்தியர்
பாலைஎய்னர், எயிற்றியர்

ஐவகை நிலங்கள் உணவு

குறிஞ்சிதினை, மலை நெல்
முல்லைவரகு, சாமை
மருதம்செந்நெல், வெண்ணெய்
நெய்தல்மீன்
பாலைசூறையாடலால் வரும் பொருள்

ஐவகை நிலங்கள் விலங்கு

குறிஞ்சிபுலி, கரடி, சிங்கம்
முல்லைமுயல், மான்
மருதம்எருமை, நீர்நாய்
நெய்தல்முதலை, சுறா
பாலைவலிமை இழந்த யானை

ஐவகை நிலங்கள் பூ

குறிஞ்சிகுறிஞ்சி, காந்தள்
முல்லைமுல்லை, தோன்றி
மருதம்செங்கழுநீர், தாமரை
நெய்தல்தாழை, நெய்தல்
பாலைகுரவம், பாதிரி

ஐவகை நிலங்கள் மரம்

குறிஞ்சிஅகில், வேங்கை
முல்லைகொன்றை, காயா
மருதம்காஞ்சி, மருதம்
நெய்தல்புன்னை, ஞாழல்
பாலைஇலுப்பை, பாலை

ஐவகை நிலங்கள் பறவை

குறிஞ்சிகிளி, மயில்
முல்லைகாட்டுக்கோழி, மயில்
மருதம்நாரை, நீர்க்கோழி, அன்னம்
நெய்தல்கடற்காகம்
பாலைபுறா, பருந்து

ஐவகை நிலங்கள் ஊர்

குறிஞ்சிசிறுகுடி
முல்லைபாடி, சேரி
மருதம்பேரூர், மூதூர்
நெய்தல்பட்டினம், பாக்கம்
பாலைகுறும்பு

ஐவகை நிலங்கள் நீர்

குறிஞ்சிஅருவி நீர், சுனை நீர்
முல்லைகாட்டாறு
மருதம்மனைக்கிணறு, பொய்கை
நெய்தல்மணற்கிணறு, உவர்க்கழி
பாலைவற்றிய சுனை, கிணறு

ஐவகை நிலங்கள் பறை

குறிஞ்சிதொண்டகப் பறை
முல்லைஏறுகோட்
மருதம்மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல்மீன்கோட்பறை
பாலைதுடி

ஐவகை நிலங்கள் யாழ்

குறிஞ்சிகுறிஞ்சியாழ்
முல்லைமுல்லையாழ்
மருதம்மருதயாழ்
நெய்தல்விளரியாழ்
பாலைபாலையாழ்

ஐவகை நிலங்கள் பண்

குறிஞ்சிகுறிஞ்சிப்பண்
முல்லைமுல்லைப்பண்
மருதம்மருதப்பண்
நெய்தல்செவ்வழிப்பண்
பாலைபஞ்சுரப்பண்

ஐவகை நிலங்கள் தொழில்

குறிஞ்சிதேன்எடுத்தல், கிழங்கு அகழ்தல்
முல்லைஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
மருதம்நெல்லரிதல், களைபறித்தல்
நெய்தல்மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்
பாலைவழிப்பறி செய்தல்

ஐவகை நிலங்கள் விளக்கம்

குறிஞ்சி

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்களை குறவன், குறத்தி என அழைத்தனர். தினை, மலை நெல் போன்றன இவர்களது உணவாக இருந்தன.

தொழில் “தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்” போன்ற தொழில்களில் இம்மக்கள் ஈடுபட்டனர். அகில், வேங்கை ஆகியவை குறிஞ்சி நிலத்தின் மரங்கள். குறிஞ்சி மலர், காந்தள் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும்.

மலையும் மலை சார்ந்த இடமாக குறிஞ்சி நிலம் காணப்பட்டதால் இங்கு கிளி, மயில், புலி, கரடி, சிங்கம் போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்பட்டன.

இவர்கள் வாழ்ந்தது குளிர் பிரதேசமாகையால், திணை, மலைநெல், மூங்கில் அரிசி, கிழங்கு வகைகள் ஆகியவற்றை உண்டார்கள்.

முல்லை

முல்லை நிலம் என்பது காடும், காடு சார்ந்த இடத்தினையும் குறிக்கின்றது. இந்நிலத்தில் வாழ்ந்த மக்களை ஆயர், ஆய்ச்சியர் என அழைத்தனர். மரங்கள் நிறைந்த மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்த இம்மக்கள் வரகு, சாமை போன்றவற்றைப் பயிரிட்டனர்.

முயல், மான் போன்ற விலங்குகளும் காட்டுக்கோழி, மயில் போன்ற பறவைகளும் இந்நிலத்தில் வாழ்ந்தன. இந்நிலத்திற்குரிய மலராக முல்லை, தோன்றி போன்றன காணப்பட்டன.

கொன்றை, காயா கொண்டனை நிலத்திற்குரிய மரங்களாகும். இந்நிலத்து மக்கள் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர்.

பாலை

குறிஞ்சி மற்றும் முல்லை ஆகிய இவ்விரண்டு இடங்களுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் எய்னர், எயிற்றியர் என அழைக்கப்பட்டனர்.

இம்மக்களின் தொழிலாக வழிப்பறி செய்தல் காணப்பட்டதால், சூறையாடலால் வரும் பொருட்களை உணவாக உட்கொண்டனர். வலிமை இழந்த யானை, புறா, பருந்து போன்றன நிலத்திற்குரிய விலங்குகளாகவும், பறவைகளும் காணப்பட்டன.

பாலை நிலத்திற்குரிய மலர்களாக குரவம், பாதிரி போன்றன காணப்பட்டன. இங்கு இலுப்பை, பாலை போன்ற மரங்களும் காணப்பட்டன.

மருதம்

வயல் மற்றும் வயல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர் என அழைக்கப்பட்டனர். இம் மக்களுடைய தொழிலாக நெல்லரிதல், களை பறித்தல் போன்றன காணப்பட்டன.

நீர் வளமும் விவசாய அறிவும் அதிகம் பெற்றிருந்த இம்மக்கள் செந்நெல், கரும்பு மற்றும் வெண்ணெலரிசியை உணவாக அதிகம் உண்டனர்.

நிலத்திற்குரிய விலங்குகள் எருமை, நீர்நாய் போன்றனவும் பறவைகளாக நாரை, நீர்க்கோழி, அன்னம் போன்றனவும் காணப்பட்டன. செங்கழுநீர், தாமரை போன்ற மலர்கள் நிலத்துக்குரிய மலர்கள் ஆகும். காஞ்சி, மருதம் ஆகியன இந்நிலத்திற்குரிய மரங்களாகும்.

நெய்தல்

கடலையும், கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்று அழைத்தனர். கடல் சார்ந்த இடம் என்பதனால் இங்கு வாழும் மக்களினுடைய தொழில்களாக மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் போன்றன காணப்பட்டன. இம்மக்கள் பரதர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர்.

உப்பு வளம் நிறைந்த இந்த இடத்தில் அதைச் சேகரித்து விற்பதால் பெறும் பொருளால் கிடைக்கும் உணவுப்பண்டங்கள், மற்றும் மீனவத் தொழில் மூலம் கிடைக்கும் மீன் முதலான கடல்சார் உயிரினங்களே இவர்கள் உணவாகும்.

முதலை, சுறா, கடல், காகம் போன்ற நிலத்திற்குரிய விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகும். தாழை, நெய்தல் போன்ற மலர்களும் புன்னை, ஞாழல் போன்ற மரங்களும் இந்நிலத்திற்குரியனவாகும்.

You May Also Like :
வாசிப்பின் நன்மைகள்
கல்வியின் பயன்கள்