இந்த பதிவில் “ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை” பதிவை காணலாம்.
சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.
Table of Contents
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஐம்பெரும் காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்
- ஐம்பெரும் காப்பியங்களின் அணிகலப் பெயர்கள்
- இரட்டைக் காப்பியங்கள்
- ஐம்பெரும் காப்பியங்களில் நூற் சிறப்பு
- முடிவுரை
முன்னுரை
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.
இவற்றுள் சிலப்பதிகாரமும்⸴ மணிமேகலையும் சங்க மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களாக ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றிய காப்பியங்களயாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காணப்பட ஏனையவை வேற்று மொழிகளைத் தழுவிய தமிழாக்கங்களாகவுள்ளன. இக்கட்டுரையில் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி காண்போம்.
ஐம்பெரும் காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் ஆனது சேர நாட்டவரான இளங்கோவடிகளினால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
குண்டலகேசி என்னும் நூலானது திருத்தக்கதேவரினால் எழுதப்பட்டதாகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலை எழுதிய ஆசிரியர் பெயர் இன்று வரை அறியப்படவில்லை.
குண்டலகேசி நூலை எழுதிய ஆசிரியர் நாதகுத்தனார் ஆவார்.
ஐம்பெரும் காப்பியங்களின் அணிகலப் பெயர்கள்
சிலப்பதிகாரத்தில் சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணியைக் குறிக்கின்றது.
மணிமேகலை என்பது மகளிர் இடுப்பில் அணியும் அணி ஆகும்.
குண்டலகேசியில் குண்டலம் என்பது பெண்கள் அணியும் காது வளையம் ஆகும்.
வளையாபதி வளையல் அணிந்த பெண் வளையாபதி ஆகும்.
சீவக சிந்தாமணியில் சிந்தாமணி என்பது அரசன் முடியில் பதிக்கப்படும் மணிக் கல்லாகும்.
இரட்டைக் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு காப்பியங்களும் தமிழ்நாட்டைக் கதைக் களமாக கொண்டவையாகும்.
சிலப்பதிகாரமானது கோவலன் எனும் வணிகன் மற்றும் அவன் மனைவி கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதாகும். இக் காப்பியத்தில் கோவலனுடன் தொடர்பு கொள்ளும் மாதவி இன்னோர் கதாபாத்திரமாகும்.
மணிமேகலையின் கதைக்களன்⸴ கதைமாந்தர்⸴ கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்ததாகும். இதனால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை ஆகும். இவளே மணிமேகலைக் காப்பியத்தின் நாயகியாகும்.
மணிமேகலை புத்தத் துறவியாகி பசிப்பிணி போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்ததால் மறைவிற்குப் பின் தெய்வமாய்ப் போற்றப்பட்டாள்.
ஐம்பெரும் காப்பியங்களில் நூற் சிறப்பு
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகின்றது. பெண் காப்பியத் தலைவி ஆகும். மன்னருக்கு நிகராக வணிகர் கருதப்படுதலை சிலப்பதிகாரத்தில் காணலாம்.
மணிமேகலை காப்பியமானது உணவிடும் உன்னதப் பணியினை கூறுகின்றது. சீவகசிந்தாமணியானது ஓர் மண நூலாகும்.
வளையாபதி தமிழன்னையின் வளையல் ஆகும். குண்டலகேசியின் கதைப் போக்கும் மணிமேகலை காப்பியத்தினை ஒத்ததாகவே உள்ளது.
முடிவுரை
ஐம்பெரும் காப்பியங்களும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான சின்னங்கள் ஆகும். இவை அறக் கருத்துக்களைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த வழியாக திகழ்கின்றன.
ஐம்பெருங் காப்பியங்கள் கூறும் அறக் கருத்துக்களைப் பின்பற்றி அதன் படி நாமும் வாழ்ந்து வாழ்வில் வளம் பெறுவோமாக.
You May Also Like :