பண்புத்தொகை என்றால் என்ன

panbu thogai enral enna

தமிழ் இலக்கணத்தில் வரக்கூடிய தொகைகளில் ஒன்றாக பண்புத்தொகை காணப்படுகிறது. இது ஒரு சொல்லின் பண்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பண்புத்தொகை என்றால் என்ன

பண்புத்தொகை என்பது பண்புப் பெயரை சேர்த்து(தொகுத்து) வரும் பெயர்ச்சொல்லாகும். ஒரு பண்பை குறிப்பது பண்புப் பெயராகும்.

அதாவது நிறம், வடிவம்,சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” எனும் பண்பு விகுதியும் “ஆகிய”, “ஆன” எனும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

பண்புத்தொகை வகைகள்

  1. வண்ணப் பண்புத்தொகை
  2. வடிவப் பண்புத்தொகை
  3. சுவைப் பண்புத்தொகை
  4. அளவுப் பண்புத்தொகை

வண்ணப் பண்புத்தொகை

வண்ணத்தின் அடிப்படையில் ஒரு பெயர்ச்சொல்லை விவரிப்பது வண்ண பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டு: செந்தாமரை, கருங்கூந்தல்

வடிவப் பண்புத்தொகை

வடிவத்தின் அடிப்படையில் ஒரு பெயர் சொல்லை விவரிப்பது வடிவ பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டு: வட்ட நிலா, செவ்வகப்பெட்டி

சுவைப் பண்புத்தொகை

சுவையின் அடிப்படையில் ஒரு பெயர்ச்சொல்லை விவரிப்பது சுவைப் பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டு: இன்சொல், இன்னுயிர்

அளவுப் பண்புத்தொகை

அழகு அடிப்படைகள் ஒரு பெயர்ச்சொல்லை விவரிப்பது அளவு பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டு: முத்தமிழ்

பண்புத்தொகை சான்று தருக

  1. பைங்கூல் = பசுமை +நூல்
  2. செவ்வேள் = செம்மை + வேள்
  3. செந்தமிழ் = செம்மை + தமிழ்
  4. நெடுந்தேர் = நெடுமை + தேர்
  5. கருங்கூந்தல் = கருமை + கூந்தல்

பண்புத்தொகை விளக்கம்

பண்புத்தொகை என்பது நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதாவது ஒரு பண்பு தொட்டு நிற்கும் ஒரு பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டாக, கருங் கூந்தல் என்பது கருமை நிறம் உள்ள கூந்தல் என்று பொருள்படும். இது கருமை எனும் பண்பு தொட்டு கருங்கூந்தல் என்று உருவானதால் இவ்வகை பெயர்ச்சொல்லுக்கு பண்புத்தொகை என்று பெயர்.

கருங்கூந்தல் – இதனை கருமை ஆகிய கூந்தல் என பிரித்தல் வேண்டும். கருமை என்பது பண்பு(நிறம்) ஆகிய என்னும் ஒரு மறைந்திருப்பதால் பண்பு தொகையாகும். பண்புத்தொகையில் “மை”எனும் விகுதியும் “ஆகிய” எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உண்மை தொகை ஆகும்.

பண்புத்தொகை சொற்கள்

இலக்கணக் குறிப்புப்படி சில பண்புத்தொகை சொற்கள் கீழே தரப்பட்டுள்ளது.

  1. செந்தமிழ்
  2. நெடுந்தேர்
  3. மெல்லடி
  4. கருவிழி
  5. குறுநடை
  6. பெருமாள்
  7. நெடும்படை
  8. நற்செயல்
  9. நல்லருள்

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பண்புத்தொகையில் மற்றுமொரு வகை இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும். பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ அல்லது சிறப்புப்பெயரோடு பொதுப்பெயரோ சேர்ந்து ஒரு பொருளை உணர்த்த வரும் சொல்லை இருபெயரொட்டு பண்புத்தொகை என்கின்றனர்.

இரண்டு சொற்களுக்கும் இடையில் “ஆகிய” என்னும் உருபு தொக்கி நிற்கும் அதாவது மறைந்து காணப்படும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை எடுத்துக்காட்டு

  • தமிழ்ச்சங்கம்
  • சாரைப்பாம்பு
  • முத்துப்பல்
  • தென்னைமரம்
  • தாமரைப்பூ
  • மாமரம்
  • தைத்திங்கள்
  • வாழைமரம்
  • மார்கழிதிங்கள்
  • மருந்துக்கடை
  • நெல்லிக்கனி
  • வட்டப்பலகை
  • கன்றுக்குட்டி

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

#1. பெரிய மீசை சிரித்தார் என்ன தொகை?

  • பண்புத்தொகை

#2. அன்புச்செல்வன் என்ன தொகை?

  • அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • தொடுதிரை – வினைத்தொகை

#3. பூங்கொடி என்ன தொகை?

  • உவமைத் தொகை
  • பூ போன்ற கொடி

#4. முத்துப்பல் என்ன தொகை?

  • உவமைத்தொகை

#5. செந்தமிழ் என்பது என்ன தொகை?

  • பண்புத்தொகை

Read more: திணை என்றால் என்ன

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்