கவுந்தியடிகள் குறித்து கட்டுரை

Kavunthiyadigal In Tamil

இந்த பதிவில் “கவுந்தியடிகள் குறித்து கட்டுரை” பதிவை காணலாம்.

சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவரே கவுந்தி அடிகள் ஆவார். கவுந்தியடிகள் ஒரு சமண சமயப் பெண் துறவி ஆவார்.

கவுந்தியடிகள் குறித்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கவுந்தியடிகளின் மதம்
  3. கவுந்தி அடிகளும் கண்ணகியும்
  4. அடைக்கலம் காக்க கவுந்தியடிகள் மாதரியைத் தெரிவு செய்ததற்கான காரணம்
  5. கண்ணகி பற்றிக் கவுந்தியடிகள் மாதவியிடம் கூறியவை
  6. முடிவுரை

முன்னுரை

சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இக்காப்பியத்தில் இயல்⸴ இசை⸴ நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

அத்தகைய சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவரே கவுந்தி அடிகள் ஆவார். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தியடிகளே. கவுந்தியடிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கவுந்தியடிகளின் மதம்

கவுந்தியடிகள் ஒரு சமண சமயப் பெண் துறவி ஆவார். சமண சமயத்தைச் சார்ந்த கவுந்தியடிகள் வைணவ சமயத்தை சார்ந்த மாதரிடம் சமண சமயத்தை சார்ந்த கண்ணகியை அடைக்கலமாக கொடுத்தார் என கூறப்பட்டுள்ளமையானது தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன என்பதும்⸴ அவர்களுக்குள் பிணக்கு இல்லை என்பதும்⸴ அவரவர் தத்தமது சமயத்தைத் தழுவ உரிமை இருந்தது என்பதையும் புலப்படுத்துகின்றது.

கவுந்தி அடிகளும் கண்ணகியும்

சிலப்பதிகாரப் பாட்டுடைத் தலைவி கண்ணகியை இன்று ஒவ்வொருவரும் பெண் தெய்வமாய்ப் பார்ப்பதற்கு அடித்தளத்தை கவுந்தியடிகள் மூலமாக இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

கண்ணகியைப் பார்த்து “கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்ˮ என்கின்றார்.

அடைக்கலம் காக்க கவுந்தியடிகள் மாதரியைத் தெரிவு செய்ததற்கான காரணம்

தீமை இல்லாதவள் அதேவேளை முதுமகளாகவும் இரக்கம் உள்ளவளாகவும் இருக்கின்றாள். எனவே அடைக்கலம் காக்கச் சிறந்தவள் என கவுந்தியடிகள் நினைத்து தேர்வு செய்தார்.

கண்ணகி பற்றிக் கவுந்தியடிகள் மாதவியிடம் கூறியவை

“செல்வமகள் அவள் இவள் என்றும்⸴ இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை.

அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நா புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள்.

தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள். இன்னும் இவளைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுவது என்றால் மகளிர்க்கு இன்றியமையாத கற்பினைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவள்.

இவளைத் தெய்வம் என்று மதிக்கிறேன்; இவள் கற்புக்கடம் பூண்ட தெய்வம்; இவளுக்கு நிகராக வேறு தெய்வத்தை நான் கண்டது இல்லை.

இவர்களைப் போலக் கற்புடை மகளிர் வாழ்வதால் தான் நாட்டில் மழை பெய்கிறது வளம் சிறக்கிறது. ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு இத்தகைய சிறப்புகள் அடைகின்றன. அதனால் இவளை ஏற்று உதவுக” என்று கூறினார்.

முடிவுரை

அடைக்கலக் காதையில் கவுந்தியடிகள் முக்கியம் வகிக்கின்றார். இவரின் மூலம் கண்ணகியின் சிறப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கவுந்தியடிகளின் துறவறப் பண்புகள் பற்றி கற்று நாமும் வாழ்வில் நலம் பெறுவோம்.

You May Also Like :

ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை