இந்த பதிவில் “எரிபொருள் சிக்கனம் கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதனை சிக்கனமாக பயன்படுத்தா விட்டால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
Table of Contents
எரிபொருள் சிக்கனம் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- எரிபொருள்களின் வகைகள்
- எரிபொருள் பயன்பாடு
- எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
- எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
மனித வாழ்வில் எரிபொருள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. எரிந்து ஆற்றல் தரும் பொருட்கள் எரி பொருட்களாகும். பெரும்பாலும் நெருப்புடனோ அல்லது நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிக்கின்றது.
இத்தகைய எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது மனிதகுல வளர்ச்சிக்கும்⸴ தொழிற்புரட்சிக்கு இன்றியமையாததாகும். இருப்பினும் சுற்றுச்சூழல் மாசடைவிற்கும் இது காரணமாகின்றது.
எனவே இதனைச் சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் சூழலைப் பாதுகாக்க முடிவதுடன் எரிபொருள் பற்றாக்குறையையும் தடுக்க முடியும். எரிபொருள் சிக்கனம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எரிபொருள்களின் வகைகள்
எரிபொருட்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று “இயற்கை அல்லது முதன்நிலை எரிபொருள்”. இவற்றுள் இயற்கையாக பெறப்படும் நிலக்கரி⸴ இயற்கை வாயு போன்றவை அடங்கும்.
இரண்டாவது “செயற்கை எரிவாயு”. இவற்றுள் மண்ணெண்ணெய்⸴ டீசல்⸴ பெட்ரோல் முதலியனவையடங்கும்.
இவை தவிர எரிபொருட்களைப் பொதுவாக திண்ம⸴ நீர்ம⸴ வளிம எரிபொருட்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
எரிபொருள் பயன்பாடு
பொருட்களைச் சரியான முறையில் எரிக்கும்போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வீடுகளில் சமைப்பதற்கும்⸴ மின்சாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கும் மண்ணெண்ணெய் குப்பிவிளக்கு பயன்பாட்டிற்கும் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அன்றாடம் நாம் போக்குவரத்தினை மேற்கொள்ளுவதற்கு எரிபொருள் பயன்படுகின்றது. குறிப்பாக மோட்டார் வாகனம்⸴ கார் வண்டி முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதற்கும்⸴ தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது.
எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
நாட்டில் கிடைக்கக்கூடிய எரி பொருட்களான டீசல், பெட்ரோல் மற்றும் நிலக்கரியின் அளவானது குறைந்து கொண்டே போகின்றது. எரிபொருள் சிக்கனத் திகதியாக டிசம்பர் 14 கொண்டாடப்படுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எரிபொருள் சிக்கனம் அவசியமாகும்.
எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டினைச் சரி செய்வதற்கு நாம் இக்காலத்திலேயே எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
எரிபொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் இயற்கைச் சூழல் மாசடைகின்றது. எனவே சூழற் பாதுகாப்பிற்கு எரிபொருள் சிக்கனம் அவசியம்.
எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள்
குறுகிய பயணங்களைத் துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தியோ அல்லது நடந்தோ மேற்கொள்ளலாம். இவ்வாறு மேற்கொள்ளும் போது எரிபொருள் சிக்கனப்படுத்துவதுடன்⸴ உடலாரோக்கியத்தையும் பேணலாம்.
இயற்கை எரிபொருள் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் எமது நாட்டுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயக்கும்.
எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் சார்ந்து விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
குறைவான மின்சக்தியில் எரியும் மின்குமிழ்களைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் எரியும் விளக்குகளை உபயோகிக்கலாம்.
முடிவுரை
எரிபொருள் சிக்கனம் நமக்கு மட்டுமல்ல நம் எதிர்கால சந்ததியினருக்கும் அவசியமாகும். எனவே வாகன ஓட்டிகள் பெரிதும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எரிபொருட்ச் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
சூழலைப் பாதுகாக்கும்⸴ மாசடைவிருந்து தடுக்கும் இயற்கை எரிவாயுவை அதிகம் பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். எரிபொருளைச் சிக்கனப்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.
You May Also Like :