எதுகை என்றால் என்ன

edhugai in tamil

தமிழ்மொழியில் காணப்படும் இலக்கணங்களில் எதுகையும் ஒன்றாகும். இவை அதிகம் செய்யுள் தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவை ஒவ்வொரு எழுத்துக்களும் அமையும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு பல வகைப்படும். எதுகை என்பது யாது? அவற்றின் வகைகள், அவற்றிற்கான உதாரணங்கள் என்பவற்றை நோக்குவோம்.

எதுகை என்றால் என்ன

ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.

எதுகை எடுத்துக்காட்டு:

  • ஞ்சம்
  • ஞ்சம்
  • ஞ்சம்
  • ஞ்சம்

எல்லா எழுத்துக்களிலும் இரண்டாவது எழுத்து “ஞ்” வந்துள்ளது இப்படி இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதே எதுகையாகும்.

எதுகையின் வகைகள்

எதுகை இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. அடி எதுகை
  2. சீர் எதுகை

அடி எதுகை

அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

அடி எதுகை எடுத்துக்காட்டு:

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு” என்ற திருக்குறளில், முதல் அடியில் உள்ள முதல் சீரில் “அகர” என்ற சொல் உள்ளது. இரண்டாவது அடியில் உள்ள முதல் சீரில்  “பகவான்” என்ற சொல் உள்ளது. இந்த இரண்டு சொற்களிலும் இரண்டாவது எழுத்தாக “க”  என்பது ஒரே போல் வந்துள்ளது. எனவே இது அடி எதுகை  எனப்படும்.

சீர் எதுகை

ஓரடிக்குள்ளே உள்ள சீர்தோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும். இவை மேலும் ஏழு வகைப்படும். அவையாவன,

  1. இணை எதுகை
  2. பொழிப்பு எதுகை
  3. ஒரூஉ எதுகை
  4. கூழை எதுகை
  5. கீழ்க்கதுவாய் எதுகை
  6. மேற்கதுவாய் எதுகை
  7. முற்று எதுகை

இணை எதுகை

ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் இரண்டாவது  எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை எனப்படும்.

இணை எதுகை எடுத்துக்காட்டு

  • பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த” என்பதில் “ய்” எனும் எழுத்து ஒன்றி வந்துள்ளது.

பொழிப்பு எதுகை

ஒரு அடியின் முதல் சீரிலுள்ள இரண்டாம் எழுத்தும் மூன்றாம் சீரிலுள்ள இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருவது பொழிப்பு எதுகை எனப்படும்.

பொழிப்பு எதுகை எடுத்துக்காட்டு:

  • தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்” இதில் “ன்” எனும் எழுத்து ஒன்றி வருகிறது.

ஒரூஉ எதுகை

ஒரு அடியின் முதல் சீரில் உள்ள இரண்டாம் எழுத்தும், நான்காவது சீரில் உள்ள இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருவது ஒரூஉ எதுகை எனப்படும்.

ஒரூஉ எதுகை எடுத்துக்காட்டு:

  • ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்” என்பதில் “ழு” என்பது ஒன்றி வருகிறது.

கூழை எதுகை

ஒரு அடியின் ஒன்று, இரண்டு, மூன்று சீர்களிலும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது கூழை எதுகை எனப்படும்.

கூழை எதுகை எடுத்துக்காட்டு:

  • பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை” என்பதில் “ற்” எனும் எழுத்து ஒன்றி வருகிறது.

கீழ்க்கதுவாய் எதுகை

ஒரு அடியின் ஒன்று, இரண்டு, மற்றும் நான்காம் சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்.

கீழ்க்கதுவாய் எதுகை எடுத்துக்காட்டு:

  • ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்” என்பதில் “ழு” எனும் எழுத்தானது ஒன்றி வருகிறது.

மேற்கதுவாய் எதுகை

ஓர் அடியின் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் சீரில் இரண்டாவது எழுத்து ஒன்றி  வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்.

மேற்கதுவாய் எதுகை எடுத்துக்காட்டு:

  • “கற்க கசடற கற்பவை கற்றவை” என்பதில் “ற்” எனும் எழுத்தானது ஒன்றி வருகிறது.

முற்று எதுகை

ஓர் அடியேன் முதல் நான்கு சீர்களிலுமே இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது முற்று எதுகை எனப்படும்.

முற்று எதுகை எடுத்துக்காட்டு:

  • “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு” இதில் “ப்” எனும் எழுத்தானது ஒரே மாதிரியாக இருந்தது.

இவற்றை தவிர இன எழுத்துக்களும் வர்க்க எழுத்துக்களும் எதுகையாக வருவதுண்டு. ஒரே மாதிரியான ஒளி உடைய இன எழுத்துக்கள் எதுகையாக வருவது உண்டு.

எடுத்துக்காட்டு:

  • ண, ன, ந – மணம், மனம்
  • ல, ழ, ள – அழைப்பு, தளைப்பு, மலைப்பு

Read more: இயைபு சொற்கள் என்றால் என்ன

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்