காற்று வேறு பெயர்கள்

காற்று வேறு சொல்

காற்று என்ற சொல்லின் வேர்ச் சொல் “கால்” என்ற சொல்லாகும். காற்றின்றி மனிதன் உயிர் வாழ முடியாது. காற்று பூமியில் எல்லையில்லாமல் எங்கும் நிறைந்த உள்ளது.

இதனையே கண்ணதாசன் “காற்றுக்கென்ன வேலி” எனப்பாடி உள்ளார். நீர் இன்றி அமையாது உலகு என்பது போல காற்றின்றியும் இவ்வுலகு அமையாது.

இந்துக்களின் காற்றுக்குரிய தலமாக திருக்காளத்தி கோயில் காணப்படுகின்றது. அங்கு வீற்றிருக்கும் இறைவன் வாயு லிங்கம் என அழைக்கப்படுகின்றார்.

இவ்வாறு பல சிறப்பினை உடையது காற்றாகும். இக்காற்றை குறிக்கும் பல பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன.

காற்று வேறு பெயர்கள்

  1. வளி
  2. வாயு
  3. ஊதை
  4. கூதிர்
  5. சதாகதி
  6. சதீலம்

காற்றின் வகைகள்

  • தெற்கிலிருந்து வீசும் காற்று “தென்றல்
  • வடக்கிலிருந்து வீசும் காற்று “வாடை
  • கிழக்கிலிருந்து வீசும் காற்று “கொண்டல்
  • மேற்கிலிருந்து வீசும் காற்று “மேலை

காற்று வீசும் வேகத்திற்கு ஏற்பவும் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன

  • 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “மென்காற்று
  • 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “இளந்தென்றல்”
  • 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “தென்றல்
  • 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புழுதிக்காற்று
  • 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “ஆடிக்காற்று”
  • 100 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “கடுங்காற்று
  • 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புயல்காற்று
  • 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று “சூறாவளிக்காற்று

காற்றினால் ஏற்படும் தீமைகள்

காற்று பெரிய பாலைவனப் பகுதிகளில் இருந்து தூசித் துகள்களை அது இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவு எடுத்துச் செல்கிறது.

காற்றினால் காட்டுத்தீ விரைவாகப் பரவும் நிலையும் ஏற்படுகிறது.

குளிரான வெப்பநிலைகள் இருக்கும்போது காற்று கால்நடைகள் மீது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கின்றது.

விலங்குகளின் உணவு சேமிப்பு, அவற்றின் வேட்டையாடல் முறை, தற்காத்துக்கொள்ளும் முறை என்பவற்றின் மீதும் காற்று தாக்கங்களை உண்டாக்குகிறது.

காற்றினால் ஏற்படும் பயன்கள்

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்படுகிறது . காற்றாலைகள் தமிழ்நாட்டில் ஆரல்வாய்மொழி ,பல்லடம் , உடுமலை பேட்டை , கயத்தாறு போன்ற இடங்களில் உள்ளன .

காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு ஆகும்.

அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு, தென்கிழக்கு பருவ காற்றின் மூலம் மழை பெறுகிறது.

பல்வேறு தாவர வகைகளின் வித்துக்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதன் மூலம் அவ்வாறான தாவரங்கள் பெருகி வளர்வதற்கும் காற்றுத் துணை புரிகிறது.

Read more: காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

காற்று மாசுபாடு என்றால் என்ன