உழைப்பாளி வேறு சொல்

உழைப்பாளி வேறு பெயர்கள்

உழைப்பாளி வேறு சொல்

உலகில் முதுகெழும்பான ஒரு வர்க்கம் என் உழைப்பாளர் வர்க்கத்தை கூற முடியும்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”

அதாவது உழைப்பாளர் செய்ய முடியாதது எதுவுமில்லை என்கிறார். தெய்வத்தால் செய்ய இயலாதவை நம் உழைப்பால் செய்ய முடியும் என வள்ளுவர் கூறுகின்றார்.

உழைப்பாளர் என்பவர் தொழில் செய்பவர் மட்டும் அல்ல ஒவ்வொரு காரியமும் நிறைவு பெற வேண்டும் என முயற்சி செய்பவரும் உழைப்பாளர்களே ஆவர். உழைப்பாளர் இன்றி இவ்வுலகில் எதுவும் கிடையாது.

உழைப்பாளி வேறு சொல்

  1. உழைப்பவர்
  2. பாட்டாளி
  3. தொழிலாளி
  4. வேலைக்காரர்கள்

உழைப்பாளி பற்றிய விளக்கம்

வர்க்கங்களின் சிறந்த வர்க்கத்தினர் உழைப்பாளி வர்க்கமே ஆகும். முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற இரண்டு வர்க்கங்கள் சமூகத்தில் காணப்பட்டன.

இதில் உழைப்பவர்களின் உழைப்பை முதலாளி வர்க்கம் சுரண்டியது. இதனால் முதலாளிகள் வளர்ந்தனர் உழைப்பாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே உழைப்பால் உயர்வோம் என்ற தொனிப்பொருளில் மே தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கும் உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்து உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் வறுமையில் வாடும் பல லட்சம் தொழிலாளர்கள் உலகில் உள்ளனர்.

உழைப்பாளிகள் சிறப்பை இன்னும் இவ்வுலகம் அறியவில்லை. மே தினம் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டாலும் உழைப்பாளருக்கு மதிப்பில்லை என்றே கூறமுடியும்.

உழைப்பாளர்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. உழைப்பாளர் இன்றி நாம் உண்ணுகின்ற உணவாகட்டும், அணிகின்ற ஆடையாகட்டும், வாங்குகின்ற பொருட்கள் ஆகட்டும், பெற்று கொள்கின்ற சேவைகளாகட்டும், பயணிக்கின்ற வாகனங்கள் ஆகட்டும், இருக்கின்ற வீடாகட்டும் நாம் பாவிக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு உழைப்பாளியின் உழைப்பு வியர்வையிலேயே தங்கியிருக்கிறது.

தொழிலாளர்கள் உழைக்காது விட்டால் நாட்டின் பொருளாதாரமே முடங்கி போய்விடும். ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் கையிலேயே தங்கியுள்ளது.

ஆகவே தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களில் கவனம் செலுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் போன்றவற்றில் அரசாங்கம் கவனமாக செயற்பட வேண்டும்.

அதுமட்டுமல்ல சமூகத்தில் ஒவ்வொருவரும் உழைத்து உண்ண வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டு வாழ வேண்டும்.

Read more: உழைப்பாளர் தினம் கட்டுரை

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை