உலக சிக்கன நாள் கட்டுரை

ulaga sikkana naal katturai in tamil

உலக சிக்கன நாள் கட்டுரை
உலக சிக்கன நாள்அக்டோபர் 31
World Savings DayOctober 31

உலக சிக்கன நாள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சேமிப்பு
  • இதன் நோக்கம்
  • சேமிக்கும் வழி வகைகள்
  • உலகளாவிய நிலை
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்தில் வாழ கூடிய தனிநபர் மட்டுமல்லாது ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினதும் தேசத்தினதும் சர்வதேசத்தினதும் சேமிப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டாபர் 31 ம் திகதி உலக சிக்கன தினமானது கடைப்பிடிக்கப்படுகின்றது.

மனிதர்கள் தாம் உழைக்கும் உழைப்பை சரியாக சேமிப்பதனால் தான் வாழ்வில் முன்னேறலாம் என்பது இந்த தினத்தின் நோக்கமாகும். இக்கட்டுரையின் வாயிலாக சிக்கனம் என்பதின் அவசியம் பற்றி நாம் இங்கே நோக்கலாம்.

சேமிப்பு

பொதுவாகவே எமது சிறுபராயத்தில் சேமிப்பு பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்த எறும்புகளை உதாரணம் காட்டி அதனை விளக்குவதுண்டு

எறும்புகள் கடினமாக உழைத்து உணவை சேமித்து வைப்பதனால் அதன் கடினமான காலங்களில் அது மகிழ்ச்சியாக வாழ்வதனை போலவே மனிதர்களாகிய நாங்களும் சிறுவயது முதலே பணத்தையோ பிற வளங்களையோ சேமித்து வைப்பதனால் எமது எதிர்காலம் வளமானதாக அமையும் என்பது தெட்ட தெளிவான உண்மையாகும்.

இதன் நோக்கம்

சிக்கன நாளானது 1924 இல் இத்தாலி நாட்டின் மிலனில் நடைபெற்ற முதல் உலக சிக்கன பேரவையின் ஆலோசனைக்கிணங்க இந்த தினமானது பிரகடனப்படுத்தப்பட்டது.

சேமிப்பு தொடர்பான உலக மக்களின் நடத்தையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

இதன் வாயிலாக உலகில் நிவலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆகவே மக்கள் இந்த தினத்தின் நோக்கத்தை அறிந்து சிக்கனம் உடையவர்களாக வாழ வேண்டும்.

சேமிக்கும் வழி வகைகள்

எமது வாழ்வில் அன்றாடம் பல்வேறான தேவைகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, பருக நீர், தங்க வீடு இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எமக்கு பணம் என்ற விடயம் நமக்கு அத்தியாவசியமாக உள்ளது.

எனவே தினம் தினம் எமது உழைப்பின் ஒரு பகுதியை நாம் சேமிக்க வேண்டும். “சிறுதுளி பெருவெள்ளம்” என்பது போல சிறுக சிறுக நாம் விரையங்களை தவிர்த்து சேமிப்பதனால் எமது வாழ்வை முன்னேற்றி கொள்ள முடியும்.

உலகளாவிய நிலை

இன்றைய உலகம் பல வழிகளில் உணவு பஞ்சம், எரிபொருள், பற்றாக்குறை குடிநீர் பிரச்சனை என பல வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கான காரணமாக மனிதனுடைய அளவுக்கதிகமான நுகர்வுகளும் இயற்கை வளங்களை வெகுவாக அழித்து விட்டமையுமே காரணமாகும்.

இதனால் இங்கு மனித இனமானது வாழ முடியாத நிலை கூட எதிர்காலங்களில் ஏற்படலாம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வல்லரசு நாடுகள் தங்கள் வளங்களை வெகுவாக பாதுகாக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

பொதுவாக சிக்கனம் என்பது பணம் என்ற விடயத்தில் மட்டுமன்றி மனிதனால் மீளவும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களிலும் இருக்க வேண்டும் இல்லாவிடின் மனிதர்கள் வாழ முடியாத கிரகமாக இந்த புவியானது மாறி விடும்.

மழைக்காலத்துக்காக கோடையில் சேமிப்பது போல எம் எதிர்காலத்துக்காக நாம் இன்றே சேமிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்வோமாக.

Read more: சேமிப்பு என்றால் என்ன

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை