கோள்களில் இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படும் கோள்கள் “யுரேனஸ் மற்றும் நெப்டியூன்” ஆகும். இந்த இரு கோள்களும் நிறை, விட்டம் மற்றும் சுழற்சி விகிதத்தில் ஒத்ததாக காணப்படுவதால் இதனை இரட்டை கோள்கள் என அழைக்கின்றனர்.
Table of Contents
நெப்டியூன்
சூரிய குடும்பத்தில் எட்டாவது உள்ள ஒரு கோளாக நெப்டியூன் காணப்படுகின்றது. இது 4.5 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை சுற்றுகின்றது. நெப்டியூன் தன்னைத் தானே சுற்றுவதற்கு 16 மணி நேரம் எடுக்கின்றது.
நெப்டியூனானது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மீத்தேன் ஆகிய மூலக் கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இது 13 துணைக்கோள்களை கொண்டுள்ளது.
இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இங்கு மணிக்கு 2000 கிலோ மீற்றர் வேகத்தில் புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன.
நெப்டியூனின் பண்புகள்
நெப்டியூனானது திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாக விளங்குகின்றது. இது பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றது.
இக்கோளினை நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோளாக காணப்படுகின்றது. இதனால் வெறும் கண்களால் இதனை காண முடிவதில்லை.
நெப்டியூனானது சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் ஆகும். நெப்டியூனின் சுற்றுப் பாதை ஏனைய கிரகங்களை போலல்லாது வட்டப் பாதையாக காணப்படுகின்றது.
யுரேனஸ்
சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள கோளாகும். இது விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோளின் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்றவை காணப்படுகின்றது.
இக்கோள் ஒரு முறை சூரியனை சுற்றி வர 84 புவி ஆண்டுகள் தேவைப்படுகிறது. இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் எடுக்கும். இக்கோளானது கிரேக்க கடவுளான யுரேனஸின் நினைவாக பெயரிடப்பட்ட கோளாகும்.
யுரேனஸின் பண்புகள்
இது சூரியனின் அருகாமையில் உள்ள ஒரு கோளாக காணப்படுகின்றது. வியாழனுக்கு பிறகு சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களின் பட்டியலில் இது ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் சுற்றுப் பாதை பெரியதாக காணப்படுகின்றது.
பூமியிலிருந்து இக்கோளை பார்க்க இரவு வானம் மிகவும் இருட்டாக காணப்படல் வேண்டும். சந்திரன் ஒரு புதிய கட்டத்தில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் தொலைநோக்கியுடன் அந்த பச்சை நீல புள்ளியை இலகுவாக காண முடியும். யுரேனஸ் மிகவும் சீரான மற்றும் எளிமையான மேற்பரப்பை கொண்டுள்ளதாக காணப்படும்.
நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் வெவ்வேறு நிறங்களில் காணப்படுவதற்கான காரணம்
நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் மிகவும் பொதுவானவையாக காணப்படுகின்றது. அதாவது ஒரே மாதிரியான நிறைகள், அளவுகள் என்று காணப்படினும் அவற்றின் தோற்றம் வெவ்வேறு நீல நிறங்களில் காணப்படும்.
அதாவது நெப்டியூனானது ஒரு செழுமையான ஆழமான நீல நிறத்திலும் அதே சமயம் யுரேனஸ் வெளிர் சியான் நிறத்திலும் காணப்படும்.
ஏன் இவ்வாறு வெவ்வேறு நிறங்களில் காணப்படுகின்றது என்பதனை நோக்குவோமேயானால் யுரேனஸை சுற்றியுள்ள மூடு பனி நெப்டியூனை சுற்றியுள்ளதை விட தடிமனாக இருப்பதாகும்.
மேலும் யுரேனசில் தேங்கி நிற்கும் மந்தமான வளிமண்டலம் நெப்டியூனை விட இலகுவான நிறத்தினை காட்டுகிறது.
அதாவது நெப்டியூன் மற்றும் யுரேனஸின் வளிமண்டலங்களில் மூடு பனி காணப்படாவிடின் இரண்டுமே வளிமண்டலத்தில் சிதறிய நீல ஒளியின் விளைவாக ஒரே மாதிரியான நீல நிறத்திலேயே காட்சியளித்திருக்கும். ஆனால் மூடு பனி காணப்படுவதால் ஒரே நிறத்தில் காணப்படாது.
யுரேனஸை விட நெப்டியூன் சுறுசுறுப்பான வளிமண்டலத்தை கொண்டிருப்பதனால் நெப்டியூனின் வளிமண்டலம் மீத்தேன் துகள்களை மூடு பனி அடுக்காக மாற்றக் கூடியதாக காணப்படுகின்றது. இதனால் மூடு பனியை நீக்குகிறது.
ஆனால் நெப்டியூனின் மூடுபனி அடுக்கை யுரேனஸில் இருப்பதை விட மெல்லியதாக வைத்திருக்கிறது. இதன் விளைவாகவே நெப்டியூனில் நீல நிறம் வலுவானதாக காணப்படுகின்றது.
Read More: நாகாலாந்து ஆட்சி மொழி