இந்த பதிவில் “இயைபு சொற்கள் என்றால் என்ன , இயைபு தொடைகள் என்றால் என்ன” என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
இயைபு சொற்கள் என்றால் என்ன
ஒரு பாடல் அல்லது செய்யுளின் சீர்களிலோ அல்லது அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ அல்லது பல எழுத்துக்களோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.
இயைபு சொற்கள் எடுத்துக்காட்டு: “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” இங்கு போதினிலே, காதினிலே ஒரே மாதிரியான ஒலியினைத் தருகின்றது. இது இயைபு சொற்கள் எனப்படும்.
இயைபு இரண்டு வகைப்படும்.
- அடி இயைபு
- சீர் இயைபு
அடி இயைபு
அடி இயைபு என்பது அடிதோறும் இறுதி எழுத்து, சொல் ஆகியன ஒன்றி வருவது ஆகும். உதாரணமாக “கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்” என்பதனைக் கூறலாம்.
சீர் இயைபு
சீர் இயைபு என்பது ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதுp எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு ஆகும். இது ஏழு வகைப்படும். இயைபினை ஆங்கிலத்தில் “Rhyming” என்பர்.
- இணை
- பொழிப்பு
- ஒரூஉ
- கூழை
- கீழ்க்கதுவாய்
- மேற்கதுவாய்
- முற்று
இயைபு தொடை என்றால் என்ன
ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல் அல்லது ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல் அல்லது ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல் ஆகும்.
மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும். ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகிறது.
ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும் அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடையேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
- ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
- ஒரு அடியிலிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
- ஒரு அடியில் வரும் இறுதிச்சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.
இயைபு தொடை எடுத்துக்காட்டு
உதாரணமாக “ஐந்து கரத்தனை ஆனை முகத்தானை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
என்ற பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஓர் இயைபுத் தொடை கொண்ட பாடலாகும்.
You May Also Like : |
---|
தனம் என்றால் என்ன |
மலைகளின் அரசி என்றால் என்ன |