அமாவாசை என்றால் என்ன

Amavasai Enral Enna Tamil

இந்த பதிவில் “அமாவாசை என்றால் என்ன” என்பதை பற்றி விரிவாக காணலாம்.

அமாவாசை என்றால் என்ன

அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே அமாவாசை ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிக்கிறது.

எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும். சூரியனும் சந்திரனும் கூடி நிற்கும் தேய்பிறை நாட்களின் கடைசி திதியாகும்.

அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்

தாய், தந்தை இல்லாத ஆண்கள் மற்றும் கணவர் இல்லாத பெண்கள் பிடிக்க வேண்டும்.

திருமணமான ஒரு பெண்ணுக்குத் தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்க கூடாது.

அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவை

அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம் முன்னேர்ர்களின் பசியும் தாகமும் அதிகரிக்கும் என்றும் அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் வந்து சேரும்.

அன்னதானம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.

காகத்திற்கு எச்சில் படாத சாதத்தை வைத்த பின்னரே வீட்டில் இருப்பவர்கள் உணவு உண்ண வேண்டும்.

ஆலயங்களுக்கு சென்று அம்மன் வழிபாடு செய்வது சிறந்தது.

அமாவாசை தினத்தில் செய்ய கூடாதவை

வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலம் போடக்கூடாது. ஏனெனில் கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை அத்துடன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. அவர்கள் வரும் போது வாசலில் நாம் கோலம் போட்டு இருந்தால் உறவினர்கள் நமக்கு வழிபாடு செய்ய வில்லை என்று நினைத்து திரும்பி சென்று விடுவார்களாம். பின் நம் வழிபாட்டினை நமது முன்னோர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்களாம். இதனாலேயே கோலம் போடக்கூடாது.

முக்கியமாக மாமிசம் சாப்பிடக்கூடாது. சமையலில் பூசணிக்காய், வாழைக்காய் சேர்த்து சமைக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது. முடிந்தவரை எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் மிகக் கடினமான வேலைகள் உடல் ரீதியான வேலைகள் எதுவும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் போது தவறி அடிப்பட்டால் ரத்தக் காயம் ஏற்படும். அடிபட்ட வீரியம் அதிகமாக இருக்கும் சீக்கிரம் ஆறாது. பதட்டமும் கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மௌனத்தை கடைபிடியுங்கள்.

அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களின் காந்த சக்தியும் மிக அதிகமாக இருக்கும்.

இதனால் மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு. அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்த நாட்களில் சுபகாரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களைத் துவங்குதல் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.

அமாவாசை தினத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

1. அமாவாசை அன்று வீடு துடைக்கலாமா

அமாவாசையன்று வீட்டை துடைக்காமல், அமாவாசைக்கு முந்திய தினத்தில் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

2. அமாவாசை அன்று தாலி கயிறு மாற்றலாமா

இதனால் மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு. அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்த நாட்களில் சுபகாரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களைத் துவங்குதல் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.

அமாவாசை வேறு பெயர்கள்

  • அமைமதி
  • மறைமதி
  • இருண்மதி
  • இருளுவா
You May Also Like :
மலைகளின் அரசி என்றால் என்ன
ஊழிக்காலம் என்றால் என்ன