மனிதனால் உணரப்படும் அறு சுவை உணர்வுகளான துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு போன்ற உணர்வுகளில் இனிப்பு என்ற சுவையும் ஒன்றாகும்.
இனிப்பு என்ற சுவையானது கரும்பு, சக்கரை போன்ற உணவுகளை சுவைக்கும் போது உணரப்படும் உணர்வாகும்.
குழந்தைப்பருவத்தில் உள்ள அனைவரும் இனிப்பு உணவையே விரும்பி உண்பர். மற்றும் கலாசார முறைப்படி நோக்கின் இனிப்பு என்பது மங்களத்தை குறிப்பதாக காணப்படுகின்றது.
அவ்வகையில் சுப காரியங்கள் நிகழும் போது இனிப்பு உணவுகள் கொடுப்பது வழக்கம். அதற்கான காரணம் யாதெனின் இனிப்பு சுவையைப் போல செய்யும் காரியமும் துலங்க வேண்டும் என்பதற்காகவே சுப காரியங்களின் போது இனிப்பு வழங்கப்படுகின்றது.
அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு. வீடு தேடி வருபவர்க்கு விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பது வழக்கம். அவ்வாறு விருந்து கொடுத்த பின்பு இறுதியில் இனிப்பு கொடுப்பதும் வழக்கமாக காணப்படுகின்றது.
இவ்வாறாக உணவு உண்டபின் இறுதியில் சர்க்கரைபொங்கல், பழங்கள், வடை, மோதகம், வெற்றிலை-பீடா, கேசரி, தேநீர் அல்லது பாயசம் போன்றவை இனிப்பாக வழங்கப்படுகின்றன.
இனிப்பு வேறு பெயர்கள்
- தித்திப்பு
- இனிமை
Read more: கண் கருவளையம் மறைய டிப்ஸ்