ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர். ஆப்பிள் ஜூஸை நொதிக்க வைத்து (Fermentation) இது தயாரிக்கப்படுகிறது.
புளிப்புச் சுவையுடையது. இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் உள்ளன.
ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்
#1. உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. ஆப்பிள் சீடர் வினிகரைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றின் முன்பகுதி, இடுப்பு மற்றும் உடலில் அங்கங்கே படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
#2. அஜீரணப் பிரச்னையை இது குணப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
#3. வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது. காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும்.
#4. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிப்பதிலும் இது முக்கிய இடம் வகிக்கிறது.
#5. சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்து இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5-10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் பொலிவடையும்.
#6. கீல்வாதம் கோளாறைச் சரிசெய்கிறது. கீல்வாதம் தொடர்பான அறிகுறிகளான வலி, இறுக்கம், அழற்சி, வீக்கம் பாதிக்கப்பட்ட மூட்டு சிவந்து போவது போன்றவற்றிற்கு ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த தீர்வைத் தருகிறது.
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் அல்கலைன் உற்பத்தி தன்மை வலியைக் குறைத்து மூட்டுகளில் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது.
#7. பெண்கள் குறிப்பாக 18-44 வயது வரை இருக்கும் பெண்கள் பொதுவாக பாதிக்கப்படும் ஒரு ஹார்மோன் கோளாறு PCOS என்னும் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பாகும். இந்த நீர்கட்டிகளை போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுகிறது.
#8. ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் உடல் அதிக இன்சுலின் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்படுகிறது. அதிக இன்சுலின் உற்பத்தி தடுக்கப்படும் அதிக டெஸ்டோஸ்ட்டிரோன் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது.
#10. உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பைக் குறைக்கின்றது. குறிப்பாக மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு பெண்கள் அதிக அளவில் உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பை பெறுகின்றனர். அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு காரணமாக இதய நோய் அல்லது பக்கவாதம் உண்டாகும் அபாயம் உள்ளது.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவு குறைய உதவுகிறது.
#11. மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை போக்க உதவுகிறது. வயிறு உப்புசம், தலைவலி, பிடிப்பு, மனநிலையில் மாற்றம் , எரிச்சல் உணர்வு, உணவுத் தேடல், வயிறு உபாதை, மலச்சிக்கல், பருக்கள், மார்பகம் மென்மையாவது போன்றவை மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் என்று அறியப்படுகின்றன. இந்த அறிகுறிகளைக் குறைக்க உதவுவதில் ஆப்பிள் சீடர் வினிகர் பெரும் பங்கு வகிக்கிறது.
You May Also Like: |
---|
அருகம்புல் பயன்கள் |
மணத்தக்காளி கீரை பயன்கள் |