அழகியல் என்றால் என்ன

alagiyal

அழகியலானது உலகை புதிய கோணங்களில் கண்டு கொள்ளவும் புரிந்து கொள்ளவும் துணைபுரிகின்ற ஒரு கலையாக திகழ்கின்றது. அழகியல் என்பது அழகுணர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

அழகியல் என்றால் என்ன

அழகியல் என்பது அழகின் தன்மையை ஆராய்ந்தும் கலைப்படைப்புகளில் அழகை இணங்கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புக்களை படைப்பதற்குமான இயலே அழகியலாகும். அதாவது அழகு மற்றும் சுவை குறித்து ஆராயும் தத்துவப் படிப்பே அழகியலாகும்.

அழகியல் என்ற சொல்லானது பயன்படுத்தப்படும் சூழலை பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது. இருப்பினும் அவை அனைத்தும் ஓரே கருத்தை சுற்றியே வருகின்றன.

அதாவது அழகான விடயம் பற்றியதாகவே காணப்படுகின்றன. மேலும் அழகியலை கலை, பண்பாடு, இயற்கை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒரு துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

அழகியலின் முக்கியத்துவம்

அழகியலானது தனிமனிதனின் இருப்பினை நிலை நிறுத்துகின்றது. அதாவது ஒரு தனிமனிதனானவன் சிறந்த முறையில் அழகியல் உணர்வினை கொண்டிருப்பதற்கு வழியமைத்து தருகின்றது.

அழகியல் கலையானது ஒரு தனிமனிதனானவன் சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு துணைபுரிகின்றது. மேலும் அழகியலினூடாக எம் மனதில் உள்ள உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்துவதோடு மன அழுத்தம் போன்றவற்றை குறைப்பதற்கு இந்த அழகியல் முறைமை துணை புரிகின்றது.

ஒரு தனிமனிதரிடத்தில் அழகியல் சார்ந்த உணர்வினை ஏற்படுத்துவதில் அழகியல் கலையானது பங்களிப்பு செய்கின்றது. அழகியல் ரீதியான மனப்பான்மையை உருவாக்குவதற்கு இவ் அழகியல் கலையானது அவசியமானதொன்றாகவே காணப்படுகிறது.

அழகியல் கலையினூடாக ஒரு விடயத்தை பற்றிய நினைவுகளை இலகுவாக நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. அழகியலானது வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு பாரிய பங்களிப்பினை மேற்கொள்கின்றது.

அழகியல் அனுபவம்

அழகியல் மற்றும் அனுபவமானது ஒன்றோடொன்று தொடர்புபட்டவைகளாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இந்த இரண்டும் உள்ளுணர்வு தன்மை கொண்டவையாகும். இது பற்றிய இரு கருத்துக்களை பின்வறுமாறு நோக்கலாம்.

அழகியல் பொருள் என்பது பொருளின் உணர்வு அனுபவம் போன்றது. அது கேட்டல், பார்த்தல், கற்பனை செய்தல் எனும் போது உணர்ச்சி வடிவில் உள்ளது

அழகியல் பொருள் கருத்திற்கொள்ளக்கூடியதொன்றாகும். அதன் தோற்றமானது அகநிலையின் விருப்பமாகவும் ஒரு பொருள் குறித்த உணர்ச்சி கலந்த இன்பமாக மட்டும் இல்லாமல் களஞ்சியமாகவும் உள்ளது.

எனவே கன்ட்ற்கு பிந்திய அழகியல் குறித்த கருத்தியல் அனைத்தும் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை சார்ந்தவையாகவே காணப்படுகின்றன.

அழகியல் மதிப்பீடானது கன்ட் இனுடைய கருத்தாக்கமாகும் அதன்படி அவரவர் அகநிலைக்கு ஏற்றாற்போல் அழகுணர்ச்சி அமையும் என குறிப்பிட்டுள்ளார். கன்ட்டினுடைய கூற்றானது அழகியல் அனுபவமானது ஞாபகங்கள், உணர்வுகள், அறிதல் திறன் போன்றவற்றோடு அனுபவதிற்கான சூழலினையும் கொண்டுள்ளது என கூறுகிறார்.

அதாவது சமூக சூழல், ஒழுக்க சூழல், என்பவற்றை கொண்டே அழகியல் அனுபவதிற்கான சூழல் ஏற்படுகின்றன. எனவேதான் அழகியலும் அனுபவமும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட கலைகளாகவே திகழ்கின்றன என்பது தெளிவாகின்றது.

அழகியலும் உளவியலும்

அழகியலானது உளவியலோடு தொடர்புபட்ட ஒன்றாகவே காணப்படுகிறது. அதாவது உதாரணமாக பல வண்ணங்களினால் வரையப்பட்டுள்ள ஓவியமானது அழகாக இருக்கின்றது என்று கூறுவதைப்போன்று ஓரே ஒரு வண்ணத்தினால் வரையப்பட்ட ஒவியமும் அழகாகதான் இருக்கின்றது என்று கூறமுடியாது.

அதாவது வண்ணம் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு உளவியல் தொடர்பான முடிவை எடுக்க முடியாது. அது வரையப்பட்ட விதம், வடிவமைப்பு என பல மாறிகளை தொகுப்பதன் மூலமாகவே அழகியல் பற்றிய விளக்கங்களை தெளிவாக பெற்று கொள்ள முடியும்.

எனவேதான் அழகியலுணர்வானது ஆழமான புரிதலோடு விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கலையாகும்.

Read More: நாகாலாந்து ஆட்சி மொழி

பச்சை தங்கம் என்று அழைக்கப்படுவது எது