அடுக்குத்தொடர் என்றால் என்ன

adukku thodar endral enna in tamil

தமிழ் மொழியின் எழுத்து இலக்கணத்தில் தமிழ் எழுத்துக்களின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துக்கள் பிறக்கும் முறை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல வகையாக எழுத்துக்களை வகைப்படுத்துகின்றனர். அந்த வகையில் அடுக்குத் தொடர் என்பது யாது என்பதை பற்றி ஆராய்வோம்.

அடுக்குத்தொடர் என்றால் என்ன

வாக்கியங்களில் பொருளைத் தெளிவுப்படுத்தவும் அழகுபடுத்தவும் உதவும் தொடர்களில் அடுக்குத்தொடரும் ஒன்றாகும். ஒரு சொல் அடுக்கி வந்து தனி தனி சொல்லாக பிரிந்தாலும் பொருள் உணர்த்துமாயின் அது அடுக்குத்தொடர் எனப்படும்.

அடுக்குத் தொடர்களின் பண்புகள்

  • உவகை, வெகுளி, அச்சம், விரைவு, அவலம், அசைநிலை முதலான பொருள்களை உணர்த்தும்.
  •  ஒரே சொல் இரட்டித்து வந்து தனியே பிரிக்கும் போதும் பொருள் உணர்த்தக் கூடியது.
  • அசை நிலைக்கு இரண்டு சொற்களாகவும் இசை நிலைக்கு இரண்டு, மூன்று, நான்கு சொற்கள் வரையும் அடுக்கி  வரும்.

உதாரணம் :

  • குமார் ஓடு.
  • குமார் ஓடு ஓடு.

இங்கு முதலாவது தொடரில் இடம் பெறும் ‘ஓடு’ என்ற சொல் ஏவல் பொருளில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் இடம் பெறும் ‘ஓடு ஓடு’ என்ற சொல் விரைவாக நிற்காமல் ஓடு என்ற பொருளைத் தருகின்றது.

ஆகவே பொருள் தரக்கூடிய ஒரு சொல் தனித்து வரும்போது ஒரு உணர்ச்சியையும் இரட்டித்து அடுக்குத் தொடராக வரும்போது வேறு உணர்ச்சியையும் தருவதை அவதானிக்கலாம்.

அடுக்குத்தொடர் எடுத்துக்காட்டு

கீழே அடுக்குத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியங்கள் சில உதாரணமாக தரப்பட்டுள்ளது.

  • பாம்பு பாம்பு – குமார் சமையலறையிலிருந்து பாம்பு பாம்பு எனக் கத்திக்கொண்டு ஓடி வந்தான்.
  • சில சில – மாணவர்கள் சில சில தவறுகள் செய்யும் போது அவர்களுக்கு அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
  • அவசர அவசரமாக – அப்பா அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
  • அப்பா அப்பா – அப்பா அப்பா என்று கத்தியவாறு தங்கை வந்தாள்.
  • வா வா – உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா!

அடுக்குத் தொடர்கள் உணர்த்தும் பொருள்கள் சில

  • அடுத்து அடுத்து – தொடர்ந்து வருதல்.
  • அடுக்கி அடுக்கி – தொடர்ந்து அடுக்குதல்.
  • அணு அணு – சிறிது சிறிதாக.
  • அடி அடி – பரம்பரையாக.
  • அழுது அழுது – தொடர்ந்து அழுதல்.
  • அளந்து அளந்து – ஆராய்ந்து.
  • அந்தோ அந்தோ – அங்கே.
  • அன்றே அன்றே – உடனே.
  • உயர உயர – உயர்ந்து கொண்டு.
  • ஊற்றி ஊற்றி – தொடர்ந்து செய்தல்.

அடுக்குத்தொடர் வகைகள்

அடுக்குத் தொடர் மூன்று வகைப்படும். அவையாவன,

  1. அசைநிலை அடுக்குத்தொடர்
  2. பொருள் நிலை அடுக்குத்தொடர்
  3. இசை நிறை அடுக்குத்தொடர்

அசைநிலை அடுக்குத்தொடர்

ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ சார்ந்து, இரு முறை ஒரு சொல் தொடர்ந்து வரும் அடுக்கு தொடரானது “அசைநிலை அடுக்குத்தொடர்” எனப்படும்.

உதாரணம்:

  • மணமக்கள் வாழிய வாழிய.
  • பொலிக! பொலிக! பொலிக! போயிற்று.

பொருள் நிலை அடுக்குத்தொடர்

உணர்ச்சிகளைக் குறிக்கும் நோக்கில் அமையும் அடுக்குத்தொடர் “பொருள் நிலை அடுக்குத் தொடர்” எனப்படும்.

உதாரணம் :

  • உவகை – வருக வருக, வாழ்க வாழ்க
  • வெகுளி – உதை உதை, அடி அடி
  • அச்சம் – நெருப்பு நெருப்பு, புலி புலி
  • விரைவு – ஓடு ஓடு, வா வா
  • அவலம் – ஐயோ ஐயோ, கெட்டேன் கெட்டேன்
  • அசைநிலை – அன்றே அன்றே

இசைநிறை அடுக்குத்தொடர்

ஓசைக்காக நிரப்புவதற்கென்று ஒரே சொல் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுவது “இசைநிறை” அடிக்குத்தொடர் எனப்படும்.

உதாரணம் :

வாழ்க நிரந்தரம் ,
வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே ! – பாரதியார்

” உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே”

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவித்திருக்காப்பு”

Read more: சொற்றொடர் என்றால் என்ன

மோனை என்றால் என்ன