தமிழ்மொழியிலே ஒரு செய்யுளை ஆக்குவதற்கு அதாவது ஒரு செய்யுள் ஒன்றை கட்டி உருவாக்குவதற்கு எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை போன்ற உறுப்புகள் யாவும் இன்றி அமையாததாக அமைகின்றது.
Table of Contents
அசை என்றால் என்ன
யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை என கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை என்று கூறுகின்றார்கள்.
அசை வகைகள் யாவை
செய்யுள் எனும் ஒலிச்சங்கிலி அசை என்னும் சிறுவளையங்களால் அமைந்து இயங்குகிறது. செய்யுளின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள இந்த அசையை உண்டாக்கும், உருவாக்கும் அமைப்பின் அடிப்படையில் அசையை இரண்டு வகையாக யாப்பிலக்கணம் வகைப்படுத்துகிறது.
- நேரசை
- நிரையசை
நேரசை
நேரசை என்பது அசை வகைகளுள் ஒன்று. இது, நான்கு வகையில் அமைகிறது. நேரசை ஒற்று நீங்களாக ஓர் எழுத்து பெறும்.
நேரசை எடுத்துக்காட்டு:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்கே உலகு”,
- தனிக்குறில் – தி
- தனிக்குறில் ஒற்று – வன்
- தனி நெடில் – ஆ
- தனி நெடில் ஒற்று – லாம்
இக்குறளின் நான்காம் சீரிலுள்ள ஆதி என்பது இரண்டு அசைகளைக் கொண்டுள்ளது. அவையாவன, “ஆ” என்ற நெடில் நேரசையையும், “தி” என்ற குறில் நேரசையும் ஆகும்.
“பகவான்” என்பது ஐந்தாவது சீராகும். இது இரண்டு வகைகளால் ஆனது “பக” என்பது ஓர் அசை, “வன்” என்பதில் குறிலும் ஒற்றும் தொடர்ந்து உள்ளன. எனவே இதுவும் நேர் அசை ஆகும்.
“எழுத்தெல்லாம்” என்பது இக்கூறலின் மூன்றாவது சீர் ஆகும். இது மூன்று அசைகளை உடைய ஒரு சீராகும். இதன் மூன்றாவது அசை “லாம்” என்பது நெடிலும் ஒற்றுமாகச் சேர்ந்து உண்டாகிய நேர் அசையாகும்.
இதில் ஒன்று நீங்கலாக ஓர் எழுத்தே வருவதை காணலாம். இந்த நால்வகையில் வருவன எல்லாம் நேரசை ஆகும்.
நிரையசை
இரு குறில் அல்லது குறில் நெடில் இணைந்து மெய் எழுத்தோடு சேர்ந்தோ சேராமலோ வருவது நிரையசை எனப்படும்.
நிரையசை என்பது அசைவகைகளுள் ஒன்று. இதுவும் நேரசையே போல நான்கு வகையில் அமையும். நிரையசை ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்துகளைப் பெறும்.
நிரையசை எடுத்துக்காட்டு:
- இரு குறில் – அடி
- இரு குறிலும் மெய்யும் – அருள்
- ஒரு குறில் அதன்பின் ஒரு நெடில் – அவா
- ஒரு குறில், அதன் பின் நெடில் அதன் பிறகு ஒரு மெய் – விடாய்
நிரை அசை நான்கு நிலைகளில் வரும்
1. இரண்டு குறில் எழுத்துக்கள் மட்டும் தனித்து வரும்.
உதாரணம்: கிளி – இரண்டு குறில் எழுத்துக்கள்.
2. இரண்டு குறில் எழுத்துக்களோடு ஒன்றும் இணைந்து வரும்.
உதாரணம்: மயில் – இரண்டு குறில் + ஒற்று.
3. குறில் எழுத்தோடு நெடில் எழுத்தும் சேர்ந்து வரும்.
உதாரணம்: புறா – குறில் நெடில் எழுத்துக்கள்.
4. குறில் நெடில் எழுத்துக்களோடு ஒன்றும் இணைந்து வரும்.
உதாரணம்: இறால் – குறில் நெடில்+ ஒற்று
Read more: எதுகை என்றால் என்ன