பெரும்பாலும் நாம் அனைவரும் வெளிப்புற அழகிற்கு கவனம் செலுத்தும் அளவிற்கு உட்புற அழகில் கவனம் செல்லுவதில்லை. மனித உடலின் மேற்புற சருமங்களை விட சருத்தில் மடிப்பு விழுந்த இடங்கள், மூட்டுக்கள் இணையும் இடங்கள் போன்றவை கருமையாக இருக்கும்.
குறிப்பாக அக்குள் போன்ற இடங்களில் மிகவும் கருப்பாக இருக்கும். இது அக்குளின் அழகையே பாழாக்கி விடும். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குள் கருமையை நீக்க செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்
அக்குள் கருமை நீங்க
#1. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளின் கருமையைப் போக்கி வெண்மையாக்க உதவுகின்றது. நாள்தோறும் கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து வந்தால் அக்குளின் கருமை நிறம் நீங்கும்.
#2. எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள்
எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும்.
லெமன் ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக பேஸ்ட்டாக்கி அதை அக்குளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து பின் கழுவி வந்தால் அக்குளில் காணப்படும் கருமை நிறம் நீங்கும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதைச் செய்யலாம்.
#3. தயிர்
தினமும் தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
#4. பேக்கிங் சோடா
இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயற்பட கூடியது. பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இதை வாரத்தில் 3 முறை செய்யலாம்.
#5. உருளைக் கிழங்கு
தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு உருளைக்கிழங்குடன் சக்கரையை தோய்த்து அக்குளில் ஸ்க்ரப் போல் மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
#6. கடலை மா
கடலை மாவுடன் தயிர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து கலந்து கருமையாக இருக்கும் இடத்தில் போட்டு ஸ்க்ரப் செய்து, அரைமணி நேரத்தின் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
#7. ஆலிவ் ஆயில்
1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 40 நிமிடங்கள் ஊற வைத்துப், பின் வெதுவெதுப்பான நீரால் கழுவி வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும். தினமும் இதைச் செய்து வந்தால் அக்குள் கருமை விரைவில் நீங்கும்.
#8. தேங்காய் எண்ணெய்
தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணையை அக்குளில் தடவி காலையில் எழுந்து நன்கு கழுவ வேண்டும். அல்லது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் சர்க்கரை சேர்த்து அக்குளில் நன்கு ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும்.
#9. காய்ச்சாத பால்
பாலிலுள்ள விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலில் உள்ள கருமையைப் போக்கி வெண்மையாக்குவதற்கு உதவுகின்றன. தினமும் ஒரு நாளுக்கு 2 அல்லது 3 தடவைகள் காய்ச்சாத பாலை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
#10. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் பிளீச்சிங் தன்மை உள்ளது. தினமும் வெள்ளரிக்காயை அல்லது வெள்ளரிக்காய், மஞ்சள், சர்க்கரை சேர்த்து அக்குளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.
You May Also Like : |
---|
பற்களில் மஞ்சள் கறை நீங்க |
கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ் |