Table of Contents
அறிமுகம்
உற்பத்தி நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்காக விளம்பரம் செய்கின்றன.
தன் உற்பத்திப் பொருட்களை உடனே மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று பொருள் ஈட்டுதல், புதுப்பொருட்கள் விற்பனைக்கு வந்திருப்பதை அறிமுகப்படுத்தல், நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்தல், விற்பனையைப் பெருக்குதல் போன்ற பல்வேறுபட்ட நோக்கங்களை விளம்பரங்கள் கொண்டுள்ளன.
ஒரு நவீன வர்த்தக நிபுணர், விளம்பரத் துறையில் பரந்த அளவிலான அறிவுத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
விளம்பரம் என்றால் என்ன
பொது மக்களின் கவனத்தை, பொதுவாக ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு அழைக்கப் பயன்படும் ஒரு கருவி விளம்பரம் ஆகும்.
அதாவது ஒன்றைப் பலரும் அறியும்படி செய்வது விளம்பரம் என சுருக்கமாகக் கூறலாம்.
விளம்பரத்தின் வரலாறு
பண்டைய மற்றும் இடைக்கால உலகில் விளம்பரங்கள் வாய்மொழியாகவே நடத்தப்பட்டன. நவீன விளம்பரத்தை நோக்கிய முதல் படி 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் அச்சிடும் வளர்ச்சியுடன் வந்தது.
17 ஆம் நூற்றாண்டில் லண்டனில் உள்ள வாராந்திர செய்தித்தாள்கள் விளம்பரங்களைக் கொண்டு வரத் தொடங்கின. 1658 இல் உண்டனில் வெளியான இதழில் விளம்பரம் முதன் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் இத்தகைய விளம்பரங்கள் செழித்து வளர்ந்தன.
19 ஆம் நூற்றாண்டில் வணிகத்தின் பெரும் விரிவாக்கம் விளம்பரத் துறையின் வளர்ச்சியுடன் சேர்ந்தது. இந்த நூற்றாண்டில்தான், முதன்மையாக அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நகல் மற்றும் கலைப்படைப்பு உள்ளிட்ட விளம்பரச் செய்திகளைத் தயாரிப்பதில் ஏஜென்சிகள் ஈடுபட்டன.
மேலும் 1920 களில், ஆரம்ப ஆராய்ச்சியிலிருந்து நகல் தயாரிப்பு வரை பல்வேறு ஊடகங்களில் இடம் பெறுவது வரை முழுமையான விளம்பரப் பிரச்சாரங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய ஏஜென்சிகள் தோன்றின.
21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக விளம்பரங்கள் பெரிதும் மாற்றங்கள் கண்டுள்ளன. இணையவளி கொரில்லா மார்கட்டிங், விளம்பரங்கள், விசிட்டிங்காட் என விளம்பரங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.
விளம்பரமும், இணையமும்
மக்கள் வானொலி, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து இணையத்திற்கு படிப்படியாக இடம் பெயர்ந்தனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், வணிகப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் ஆன்லைன் இடத்தை ஒரு சிறந்த இடமாக சந்தையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இன்று, ஆன்லைன் விளம்பரம் உலகின் மிகவும் இலாபகரமான தொழில்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இணையத்தில் விளம்பரங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. குறைந்த செலவில் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும், இணையத்தில் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு நிறைய வழிகள் உள்ளன, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் நுகர்வோர் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ள முடியும்.
இருப்பினும், விளம்பரங்கள் சில சமயங்களில் வாழ்வுக்கு அதிகம் தேவைப்படாத ஒரு பொருளுக்குக் கூட அத்தியாவசிய பொருளென்னும் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
மேலும் பொருட்களை விற்பதற்கு விளம்பரங்களைப் பயன்படுத்துவது போன்றே குழந்தைகள் கல்வியின் அவசியம், குடி போதையுடன் வாகனம் செலுத்தக் கூடாது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களும் அரசாங்கத்தாலும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களாலும் விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
You May Also Like : |
---|
விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை |
தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் |